This handout from the Royal Thai Navy taken and released on Feburary 4, 2020 shows an AirAsia plane carrying Thai nationals who had been evacuated from Wuhan, the epicentre of the novel coronavirus outbreak, after it landed at U-Tapao Airport in Rayong. (Photo by Handout / ROYAL THAI NAVY / AFP) / —–EDITORS NOTE — RESTRICTED TO EDITORIAL USE – MANDATORY CREDIT “AFP PHOTO / ROYAL THAI NAVY ” – NO MARKETING – NO ADVERTISING CAMPAIGNS – DISTRIBUTED AS A SERVICE TO CLIENTS
ANTARABANGSANATIONAL

சிறப்பு விமானம் 189 மலேசியர்கள் இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்டனர்

புது டில்லி, மார்ச் 24-

சென்னையில் நாடும் திரும்ப இயலாமல் பரிதவித்த 189 மலேசியர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ஏர் ஆசியா விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை மலேசியா வந்தடைந்தனர். திருச்சியில் இருந்து புறப்படவிருந்த மற்றொரு விமானம், எதிர்பாராத வேளையில் இந்திய அரசாங்கம் அனுமதி அளிக்காத காரணத்தினால் அப்பயணம் தடை செய்யப்பட்டது என்று சென்னைக்கான மலேசிய தூதரக அதிகாரி கே.சரவணன் கூறினார்.

நாடு திரும்ப இயலாதவர்கள் பட்டியலில் 1,726 மலேசியர்கள் இடம்பெற்றுள்ளனர் என்றார் அவர். நடப்புச் சூழலை இரு நாட்டு தூதரகங்களும் கண்காணித்து வருகின்றனர். தங்கள் குடும்ப உறுவுகளுடன் சேர முடியாமல் பரிதவிக்கும் மலேசியர்கள் நலமுடம் நாடு திரும்புவதை உறுது செய்ய கடுமையான உழைத்து வருகிறோம் என்று அவர் உத்தரவாதம் அளித்தார்.

புது டில்லியில் உள்ள மலேசியத் தூதரகத்தை சுமார் 400 மலேசியர்கள் தொடர்பு கொண்டனர் என்றார் அவர்.
நலமுடன் நாடு திரும்பிய 189 பயணிகளில் மூவர் மழலையர் என்ற தகவலையும் அவர் தெரிவித்தார்.கோவிட்-19 வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக இந்திய அரசாங்கம் தடை செய்த விமானப் பயணங்கள் காரணமாக நாடு திரும்ப முடியாமல் பரிதவித்த மலேசியர்களில் இதுவரை 699 மலேசியர்கள் 5 சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்து வரப்பட்டனர்.


Pengarang :