Petugas Majlis Perbandaran Ampang Jaya (MPAJ) menggunakan lori tangki bagi menjalankan proses semburan nyah kuman di Pangsapuri Taman Dato Ahmad Razali, Ampang pada 29 Mac 2020 sebagai langkah mencegah penularan Covid-19. Foto FIKRI YUSOF/SELANGORKINI
NATIONAL

சிலாங்கூர், கோலாலம்பூரில் எஸ்டபள்யூ கழகத்தின் துப்புரவு நடவடிக்கை

ஷா ஆலம், மார்ச் 30-

சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் பெரிய அளவிலான துப்புரவு நடவடிக்கையில் திடக் கழிவு மற்றும் பொது துப்புரவு நிர்வாகக் கழகம் ( எஸ்டபள்யூ கோர்ப்) ஈடுபட்டுள்ளது.
இந்நடவடிக்கை புக்கிட் டாமன்சாரா, ஜாலான் ஓஸ்மான் பொது சந்தை, பெட்டாலிங் ஜெயா, சுங்கை ரமால் டாலாம், காஜாங் மற்றும் கோலாலம்பூர் ஆகியவற்றில் மேற்கோள்ளப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

இந்நடவடிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும் என்றும் கோவிட்-19 தொற்று பரவலைத் தடுக்கும் அரசாங்க நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும் என்று அது கூறியது.
இந்நடவடிக்கை இதர மாநிலங்களிலும் குறிப்பாக அதிக பரவல் நடைபெறுவதற்கான சாத்தியம் உள்ள சிரம்பான், மஸ்ஜிட் பஞ்சோர் ஜெயா (நெகிரி செம்பிலான்), செனாவாங் ( தாமான் டேசா ஆர்க்கிட், தாமான் ஸ்ரீ பாகி சூராவ், தாமான் டேச மெலோர் சூராவ், தாமான் டேசா அங்கெரிக்) ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் என்றும் அது கூறியது.


Pengarang :