SELANGOR

காஜாங்கில் எட்டு சாலைகள் மூடப்பட்டது சரியான நடவடிக்கையே – மந்திரி பெசார்

பாங்கி, ஏப்.7-

கோவிட்-19 வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக காஜாங் சுர்று வட்டாரத்தைச் சேர்ந்த எட்டு சாலைகளை போலீஸ் மூடியது ஒரு சரியான நடவடிக்கையே என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
மூடப்பட்ட சாலைகள் யாவும் தொற்று பரவும் அபாயம் கொண்ட பல்வேறு பகுதிகளை இணைப்பதால் இந்நடவடிக்கை அவசியமான ஒன்று என அவர் சொன்னார்.

“அவ்வட்டாரத்தில் இருக்கும் சுங்கை ரமால் பகுதியில் கோவி-19 தொற்று பரவல் ஏற்பட்டுள்ளதை நாம் அறிந்திருந்தோம்” என்றார். எனவே, காஜாங் வட்டாரத்தில் நடமாட்ட கட்டுப்பாடு கடுமையாக்கப் பட்டுள்ளதைத் தொடர்ந்து அங்கு எவரும் சுதந்திரமாக வெளியே செல்லவும் உள்ளே வரவும் முடியாது என்று இங்குள்ள தனிப்பட்டுத்தப்பட்ட முகாமை பார்வையிட்ட பின்னர் அமிருடின் கூறினார்.

இதனிடையே, காஜாங்கில் எட்டு சாலைகள் மூடப்பட்டுள்ள வேளையில் நாளை இங்கு சாலைத் தடுப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்ப்டும் என்று காஜாங் மாவட்ட போலீஸ் படைத் தலைவர் துணை ஆணையர் அகமது ஜஃப்பிர் முகமது யூசோப் தெரிவித்தார்.


Pengarang :