Seramai 80 anggota dan empat pegawai FRU ditempatkan di daerah Petaling bermula 10 April. Foto Sumber: Facebook IPD Petaling Jaya
SELANGOR

பிகேபி: ஐபிடி பெட்டாலிங் ஜெயா கலகத்தடுப்பு படையின் உதவியை பெறுகிறார்கள்

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 10:

கோவிட்-19 வைரஸ் நோயை கட்டுப் படுத்தும் நோக்கத்தோடு சாலை தடுப்பு சோதனைகளை மேற்கொண்டு வரும் பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறைக்கு (ஐபிடி) மத்திய ரிசர்வ் படையினர்  (எப்ஆர்யூ) கைகொடுக்க இருக்கின்றனர். ஐபிடிக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தம் 80 படையினரும் மற்றும் நான்கு அதிகாரிகளும் பணியில் ஈடுபட உள்ளனர் என பெட்டாலிங் ஜெயா ஐபிடி ஆணையர் ஏசிபி நிக் எஸானி முகமட் ஃபசால் தெரிவித்தார்.

” நாங்கள் எங்களது மொத்த காவல்துறையின் பலத்தை அதாவது 930 பேர்கள் அடங்கிய மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் படையினர் முழுமையாக பணியில் ஈடுபட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து பெட்டாலிங் ஜெயா மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஏழோடு சேர்த்து மேலும் இரண்டு சாலை தடுப்பு சோதனைகளை மேற்கொள்ள எப்ஆர்யூ உதவி கண்டிப்பாக தேவை,” என்று ஜாலான் பிஜேயூ 7/1 முத்தியாரா டமன்சாராவில் புதிதாக இயக்கப்படும் சாலை தடுப்பு சோதனைகளை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு நிக் எஸானி முகமட் ஃபசால் தெரிவித்தார்.


Pengarang :