KUALA LUMPUR, 18 Mei — Ahli Parlimen Langkawi Tun Dr Mahathir Mohamad selepas menghadiri Istiadat Pembukaan Mesyuarat Penggal Ketiga Majlis Parlimen ke-14 di Bangunan Parlimen hari ini. — fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA KUALA LUMPUR, May 18 — Langkawi Member of Parliament Tun Dr Mahathir Mohamad after the official opening of the Third Session of the 14th Parliament in Parliament Building today.?–fotoBERNAMA (2020) COPYRIGHTS RESERVED
NATIONAL

கோவிட்-19 தொற்று நோய் சூழ்நிலையில் அரசாங்கம் அரசியல் செய்து வருகிறது; பாக்காத்தான் ஆட்சியை கைப்பற்றி உள்ளது !!!

ஷா ஆலம், மே 18:

கோவிட் -19 தொற்றுநோய் நாட்டை தாக்கிக் கொண்டிருக்கும் போது பாக்காத்தான் ஹாரப்பன் (பக்காத்தான்) நிர்வாகத்தில் உள்ள மாநிலத்தை கைப்பற்றியதன் மூலம் மத்திய  அரசாங்கம் அரசியல் ரீதியாக செயல்படுகிறது என்று துன் டாக்டர் மகாதீர் முகமட் குற்றம் சாட்டிினார் . பிரதமர் டான்ஸ்ரீ முஹீடின் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணி (பெரிகாத்தான்) பல மாநில அரசாங்கங்களை மாற்றியுள்ளது என்று பெர்சத்து கட்சியின் அவைைத் தலைவரான மகாதீர் கூறினார்.

“ ஆனால் இதுவரை நாம் கண்டது என்னவென்றால், கோவிட் -19 பிரச்சினையை கையாளும் நிர்வாகத்தை விட அரசாங்கம் என்ன செய்திருக்கிறது என்றால் அரசியல் மட்டுமே. பெர்சத்து கட்சி இன்னும் மத்தியில் ஆளும் கட்சியாக இருந்தாலும், மாநில அரசாங்கமும் மாறிவிட்டது என்பதை நாங்கள் காண்கிறோம். ஜொகூர் மற்றும் கெடாவில் அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளுக்கு ஆட்சியை விட்டுக் கொடுத்துள்ளது,” என்று மகாதீர் முகமட் இன்று நடைபெற்ற நாாடாளுமன்ற கூட்டத்திற்கு  பின்னர் செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு பேசினார்.


Pengarang :