=EXCO Alam Sekitar, Teknologi Hijau, Sains, Teknologi Dan Inovasi (STI) dan Hal Ehwal Pengguna, Hee Loy Sian berucap sempena Majlis Perasmian Program Kesedaran Alam anjuran FRIM dan Kerajaan Selangor di Kem Perah, FRIM, Kepong pada 5 November 2019. Foto FIKRI YUSOF/SELANGORKINI
SELANGOR

பிகேபி காலகட்டத்தில் வியாபாரிகள் கோழி விலையை உயர்த்தக்கூடாது- ஆட்சிக்குழு உறுப்பினர்

ஷா ஆலாம், மே 17:

நடமாடு  கட்டுப்பாட்டு ஆணையினா (பிகேபி)  காலப்பகுதியில் கோழி விலையை உயர்த்த வர்த்தகர்கள் பயன்படுத்தக்கூடாது என்று சிலாங்கூர் மாநில பயனீட்டாளர்கள் நலன் ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான்  தெரிவித்தார். கோழி விலை கடந்த வாரம் ஒரு கிலோ ரிம 4.60 இலிருந்து இந்த வாரம் ஒரு கிலோ RM7.10 ஆக உயர்ந்தது என்று மாநிலத்தில் பொது மக்கள் புகார்கள் கூறியது ஏமாற்றமளிப்பதாக ஹீ லோய் சியான் கூறினார்.

“கபொருட்களின் விலைக் கட்டுப்பாடு உள்நாட்டு வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சின் (கேபிடிஎன்ஹெப்) கீழ் உள்ளது, ஆனாலும், பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு  நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருவோம், ” என்று அவர் சிலாங்கூர் இன்றுக்கு  கூறினார். சூப்பர் மார்க்கெட்டுகள், மளிகைக் கடைகள் உட்பட பல இடங்களில் வாடிக்கையாளர்கள் ஒரு கிலோவிற்கு ரிம 8.10 வரை கோழி வாங்கியதாக நேற்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.


Pengarang :