ECONOMYPBT

ஆற்றோரங்களில் தொழிற்சாலை அமைப்பதற்கான நிபந்தனைகளை மறுஆய்வு செய்ய சுற்றுச்சூழல் துறைக்கு உத்தரவு

ஷா ஆலம், நவ 27- சுங்கை சிலாங்கூர் மற்றும் சுங்கை லங்காட் ஆற்றோரங்களில் தொழிற்சாலைகளை அமைப்பதற்கான நிபந்தனைகளை மறு ஆய்வு செய்யும்படி சுற்றுச்சூழல் துறை பணிக்கப்பட்டுள்ளது.
அறுபதாயிரம் லிட்டருக்கும் அதிகமான கழிவுகளை வெளியேற்றும் தொழிற்சாலைகள் மட்டுமே சுற்றுச்சூழல் துறையிடம் பதிவு செய்ய வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக பொது மற்றும் அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.
இப்பகுதிகளில் 15,000 தொழிற்சாலைகள் இயங்கி வரும் வேளையில் 233 தொழிற்சாலைகள் மட்டுமே முறையாக பதிவைக் கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.
இவ்விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்தும்படி சுற்றுச்சூழல் துறையை நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம். இவ்விவகாரத்தை அவர்கள் முறையாக கையாளாவிட்டால் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார் அவர்.
மாசுபாடு காரணமாக சுங்கை சிலாங்கூர் மற்றும் சுங்கை செமினி நீர் விநியோகத்தில் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்ப்பது தொடர்பான விளக்கமளிப்புக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :