ANTARABANGSANATIONALSUKANKINI

சீ கேம்ஸ்சில் கராத்தே மற்றும் சிலாட் குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்

கோலாலம்பூர்,மார்ச் 27: வியாட்நாமின் ஹனோய் நகரில் நடைபெற இருக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடையே இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் சீ கேம்ஸ் எனப்படும் போட்டியில் கராத்தே மற்றும் சிலாட் குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று டத்தோக் ஹமீதீன் மொஹமட் அமீன் கேட்டுக் கொண்டார்.

அவர் அவ்வாறு கூற அந்த இரண்டு அணிகளின் கடந்தக் கால வெற்றிகளே காரணமாகும். இதற்கு முன்னர் ‘’சீ விளையாட்டுகளில்’’ மலேசிய அணிகளுக்கு அவை தங்கம் ஈட்டித்தர தவறியதில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெற்ற போட்டியில் சிலாட் குழு இரண்டு தங்கப் பதக்கங்களையும், இரண்டு வெங்கலத்தையும் வென்றது, கராத்தே நான்கு தங்கத்தையும் நான்கு வெள்ளியையும் வீட்டிற்கு எடுத்து  வந்தது என்றார் அவர்.

2021 ஆண்டு சீ விளையாட்டு தயார் நிலைக்குறித்து நேற்று இரவு மூன்று விளையாட்டுக் குழு நிர்வாகிகளுடனும், மாநில விளையாட்டு சங்க செயலாளர்கள் இருவருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக ஹமீடின் கூறினார்.

அந்த சந்திப்பில் மலேசிய ஸ்னூக்கர் மற்றும் பில்லியர்ட் சங்கத்தின் (எம்.எஸ்.பி.எஃப்) தலைவர் மெல்வின் சியா சீ ஓன், மலேசிய பெட்டான்க் அசோசியேஷன் (பிபிஎம்) தலைவர் டத்தோ ராட்ஸி மன்சர், மலேசிய வாள் சண்டை சங்கத்தின் (எம்.எஃப்.எஃப்) தலைவர் ருஸ்னி அபு ஹசன் ஆகியோர் கலந்து கொண்டனர். மலேசிய கராத்தே சங்கத்தின் (மக்காஃப்) டத்தோக் நூர் அஸ்மி அகமது மற்றும் மலேசிய தேசிய சிலாத் கூட்டணியின் (பெசாக்கா) டத்தோக் மெகாட் சூல்கர்னைன் ஓமார்டின் ஆகியோர் ஆகும்.

“ஸ்னூக்கர் மற்றும் பில்லியர்ட் மற்றும் வாள் சண்டை இரண்டும் விளையாட்டு கவுன்சலின் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இல்லாததால், வியட்நாமில் 31 வது சீ கேம்ஸூக்கு முன்னதாக அச்சங்கங்கள் பயிற்சி மையங்களையும் பயிற்சியாளர்களையும் பெறவும் அவர்களும் இறுதி கட்ட தயார் நிலையிலிருப்பதற்கும் உதவுவோம்” என்று அவர், மலேசிய ஒலிம்பிக் கவுன்சலின் (எம்ஓஎம்) பேஸ்புக் வழி தெரிவித்துள்ளார்.


Pengarang :