ANTARABANGSAECONOMY

அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசிக்கு டென்மார்க் தடை

டென்மார்க்- ஏப் 15– அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசிக்கு தடை விதித்த முதல் ஐரோப்பிய நாடாக டென்மார்க் விளங்குகிறது.  பக்கவிளைவுகள் குறித்த அச்சம் காரணமாக அந்த தடுப்பூசியின் பயன்பாட்டை அந்நாடு கடந்த செவ்வாய்க்கிழமை நிறுத்தியது.

அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசி ஆக்கரமான பலனைத் தரக்கூடியது என்று உலக சுகாதார நிறுவனமும் ஐரோப்பிய மருத்துவ அமைப்பும் உறுதியளித்துள்ள போதிலும் அந்த தடுப்பூசியைப் பயன்படுத்துவதில்லை என்ற நிலைப்பாடடில் டென்மார்க் சுகாதாரத் துறை உறுதியாக உள்ளது.

அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசி இன்றி  டென்மார்க் தனது தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தொடரும் என்று அந்நாட்டு சுகாதாரத் துறை இயக்குநர் சோரன் புரோஸ்டர்ன் கூறினார்.

ஆக்ஸபோர்டு பல்கலைக்கழகத்தின் தயாரிப்பான அந்த தடுப்பூசியை செலுத்திச் கொண்டவர்களுக்கு இரத்த உறைவு உள்ளிட்ட பக்க விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக புகார் வந்துள்ளன.

டென்மார்க் உள்பட 12 நாடுகள் அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசிக்கு தடை விதித்தன. எனினும், அந்த தடுப்பூசி பாதுகாப்பானது என்று ஐரோப்பிய சுகாதாரத் துறை உறுதியளித்ததைத் தொடர்ந்து பெரும்பாலான நாடுகள் அத்தடையை மீட்டுக் கொண்டன.

அஸ்ட்ராஸேனோ மீதான தடைக்குப் பின்னர் டென்மார்க் அரசாங்கம் பைசர் பயோன்என்டெக் மற்றும் மோடெர்னா தடுப்பூசிகளைக் கொண்டு தனது தடுப்பூசி திட்டத்தை தொடர்கிறது.


Pengarang :