ECONOMYSELANGOR

கோழியின் விலையை நிலைப்படுத்த  உச்ச வரம்பு விலைத் திட்டம் அமல்

புத்ரா ஜெயா, ஏப் 22-நாடு முழுவதும் நேற்று தொடங்கி அமல்படுத்தப்பட்ட 2021 நோன்புப் பெருநாள் உச்சவரம்பு விலைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் நிலைப்படுத்தப்பட்டுள்ளது.

சில்லரை வியாபாரிகள், விவசாய சந்தைகள், மளிகைக் கடைகள், மொத்த வியாபாரிகள் மற்றும் பேரங்காடிகள் உள்பட 2,100 பேரிடம் நேற்று சோதனை மேற்கொள்ளப்பட்டதாக உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ ஹஸ்னோல் ஸாம் ஸாம் அகமது  கூறினார்.

அந்த சோதனையில் இரு நிறுவனங்கள் மட்டுமே கிலோ வெ.7.90 என நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் கோழிகளை விற்றது கண்டுபிடிக்கப்பட்டது என்றார் அவர்.

இத்திட்டம் அமலாக்க கண்டு ஒரு தினமே ஆகியுள்ளதால் புதிய விலை நிர்ணயத்தை அமல்படுத்த மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகளுக்கு கால அவகாசம் தேவைப்படும். ஆகவே, புதிய விலைத் திட்டத்தை அனைத்துத் தரப்பினரும் பின்பற்றுவதற்கு ஏதுவாக போதுமான கால அவகாசம் வழங்கவுள்ளோம் என்று அவர் சொன்னார்.

கோழிகளுக்கான கிலோ வெ.7.90 என்ற  விலை நிர்ணயம் தங்கள் வர்த்தகத்தை பெரிதும் பாதிக்கும் என்ற வியாபாரிகளின் புகார் குறித்து கருத்துரைத்த அவர், இந்த வர்த்தக சங்கிலித் தொடரில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து வியாபாரிகளுக்கும் லாபத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் இத்திட்டத்தால் எந்த வருமான பாதிப்பும் ஏற்படாது என்று அவர் தெவித்தார்.

உதாரணத்திற்கு, பண்ணையில் கோழியின் விலை கிலோ வெ.5.80 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்த வர்த்தகத்திற்கு குறிப்பிட்ட அளவு லாபத்  நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதனைப் பின்பற்றினால் பிரச்னை எழ வாய்ப்பில்லை என அவர் குறிப்பிட்டார்.

 

 


Pengarang :