ECONOMYYB ACTIVITIES

வெ. 432,000 மதிப்புள்ள அங்கீகாரம் பெறாத மூலிகைப் பொருள்கள் பறிமுதல்

கோத்தா பாரு, ஏப் 26- பாசீர் மாஸ், பண்டார் தசேக் ராஜாவிலுள்ள கடையொன்றில் சிறப்பு அதிரடிப் படையின் 7வது பிரிவு நேற்று மாலை  மேற்கொண்ட  சோதனையில் 4 லட்சத்து 32 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள மூலிகை பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

போத்தல்களில் அடைக்கப்பட்ட அந்த மூலிகைப் பொருள்கள் சுகாதார அமைச்சின் அங்கீகாரத்தை பெறவில்லை என்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அந்த அதிரடிப் பிரிவு அப்பொருள்களை கைப்பற்றியதாக அதன் களப்பிரிவு அதிகாரி சூப்ரிண்ட். அஸாரி நுசி கூறினார்.

கிடங்கு ஒன்றில் அங்கீகரிக்கப்படாத மூலிகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து இச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.

அந்த இரட்டை மாடி  கடை வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது  அதன் பணியாளர் என சந்தேகிக்கப்படும் 29 வயது நபர் மட்டுமே அங்கிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பயோ நிர்வி என்ற பெயர் பொறிக்கப்பட்ட 4,800 போத்தல் மூலிகைகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த மூலிகை போத்தல் ஒவ்வொன்றும் 90 வெள்ளி மதிப்புடையவை என கருதப்படுகிறது என்றார் அவர்.

அந்த மூலிகைகள் சுகாதார அமைச்சின் அங்கீகாரத்தை பெற்றவை என்பதை உறுதிபடுத்தும் ஆவணம் எதனையும் அந்த பணியாளரால் காட்ட முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

 


Pengarang :