ECONOMYNATIONAL

417,470 பேர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாக பெற்றுள்ளனர்

கோலாலம்பூர், ஏப் 15- தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் ஏப்ரல்  13 வரை  4 லட்சத்து 17 ஆயிரத்து 470 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

அதே காலக்கட்டத்தில்  6 லட்சத்து 32 ஆயிரத்து 669 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சர்  டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா கூறினார்.

இதன் வழி நாட்டில் மொத்தம் 10 லட்சத்து 50 ஆயிரத்து 138 பேர் தடுப்பூசித் திட்டத்தில் பங்கு பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதிக எண்ணிக்கையிலானோர் தடுப்பூசி  பெற்ற மாநிலங்களில் சிலாஙகூர் (86,577 பேர், சரவா (62,724பேர்), ஜோகூர் (57,248பேர்) மற்றும்  சபா (54,817பேர்) ஆகிய மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன என்றார் அவர்.

தடுப்பூசித் திட்டத்திற்கு இதுவரை 86 லட்சத்து 87 ஆயிரத்து 372 பேர் பதிந்து கொண்டுள்ளதாக கூறிய அவர், அவர்களில் 35.8 விழுக்காட்டினர் அதாவது 23 லட்சத்து 6 ஆயிரத்து 344 பேர் சிலாங்கூரைச் சேர்ந்தவர்கள் என்றார்.


Pengarang :