SELANGOR

சிலாங்கூர் இந்திய சமூகத் தலைவர்களின் மாநாடு

ஷா ஆலம் , பிப்ரவரி 10:

சிலாங்கூர் இந்திய சமூகத் தலைவர்களின் ஏற்பாட்டில் பரிவுமிக்க மக்கள் நலதிட்ட கருத்தரங்கு 11-2-2018ல் ஞாயிற்றுக்கிழமை மாலை மணி 3க்கு ஷா ஆலம், செக்சன் 7-இல் அமைந்துள்ள ரூமா எக்ஸ்கோவில்  நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு கணபதிராவ் தலைமை தாங்குகிறார்.

மாண்புமிகு கணபதிராவ் பணிமனையில் சிறப்பு அதிகாரியாகவும் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களான திரு.வசந்த குமார், யோகேஸ்வரி மற்றும் திரு. குணா மூவரும், கணபதிராவின் பணி பிரிவான பரிவுமிக்க அரசாங்கம் , வறுமை ஒழிப்பு, தோட்டத் தொழிலாளர் போன்ற பிரிவுகளின் வழி மக்களுக்காக இயங்கும் நன்மைகளைப் பற்றி பேசவிருக்கின்றனர்.

பிறகு, மாண்புமிகு நிக் நஸ்மியின் சிறப்பதிகாரியான திரு. எம்யு ராஜா அவர்கள், தமிழ்ப்பள்ளிகளுக்கானா 5 மில்லியன் மானியத்தைப் பற்றி விரிவான விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், மாண்புமிகு அமிருடினின் சிறப்பதிகாரியான திரு. ஜஸ்த்தின் ராஜ் அவர்கள் இந்திய இளைஞர்கள் வணிகத்துறையில் மேலும் உயர 2017ம் ஆண்டு 486 பேர் நன்மையடைந்ததைப் போல் 2018ம் ஆண்டு 30 லட்சம் வெள்ளியை எப்படி இளைஞர்களுக்கு பயனடையச்செய்யலாம் என்பதனைப் பற்றி பேசவுள்ளார்.

அது மட்டுமின்றி மேடைப் பேச்சுப் பயிற்சியாளரான திருமதி. வசந்தி பிரான்சிஸ் அவர்கள், இந்திய சமூகத் தலைவர்கள் எவ்வாறு மக்களை
அனுகி, சிலாங்கூர் மாநில அரசின் திட்டங்களை அவர்களிடம் கொண்டு போய் சேர்ப்பது பற்றி உரையாற்றுவார்.

அதேவேளையில் சிலாங்கூர் இன்று மாத இதழ் தலைமையாசிரியரும் சிலாங்கூர் போர்ட்டல் பொருப்பாளருமான திரு.செகு சேகர் ,
சிலாங்கூர் மாநில அரசின் மக்களுக்காக செய்யும் நன்மைகளை சிலாங்கூர் இன்று பத்திரிகை மற்றும் போர்ட்டல் வழி எவ்வாறு மக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கு இந்திய சமூகத் தலைவர்கள் உதவ வேண்டுமென்பதனையும் பற்றி பேசவுள்ளனர்.


Pengarang :