NATIONAL

அஸ்மின், வான் அஸிஸா மற்றும் 11 முக்கிய தலைவர்கள் மத்திய அமைச்சர்களாக பதவி ஏற்றனர்

கோலா லம்பூர் , மே 21:

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி, இன்று பொருளாதார நலன் அமைச்சராக இஸ்தானா நெகாராவில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார். கெஅடிலான் கட்சியின் தேசிய துணைத் தலைவருமான அஸ்மின் அலி, தலைவர் டத்தோ ஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் மற்றும் மகளிர் தலைவியான ஸூரைடா கமாரூடின் ஆகியோரோடு பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார். மேன்மை தங்கிய மாமன்னர் சுல்தான் முகமட் V முன்பு பதவி பிரமாணம் மற்றும் இரகசியம் பாதுகாப்பு சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

கடந்த மே 18-இல் மேன்மை தங்கிய மாமன்னர் சுல்தான் முகமட் V, அமைச்சர்களின் பெயர் பட்டியலை ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

பதவி பிரமாணம் எடுத்துக் கொண்ட அமைச்சர்களின் விபரங்கள்

1. டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில்

துணைப் பிரதமர்

மகளிர் & குடும்ப மேம்பாடு அமைச்சர்

2. லிம் குவான் எங்

நிதியமைச்சர்

3. டான்ஸ்ரீ முஹிடின் யாசின்

உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர்

4. முகமட் சாபு

தற்காப்பு அமைச்சர்

5. டாக்டர் மஸ்லி மாலிக்

கல்வி அமைச்சர்

6. ரீனா ஹாரூன்

கிராமப்புற மேம்பாடு அமைச்சர்

7. டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி

பொருளாதார நலன் அமைச்சர்

8. ஸூரைடா கமாரூடின்

வீடமைப்பு மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர்

9. லோக் சியூ பூஃக்

போக்குவரத்து அமைச்சர்

10. கோபிந்த் சிங்

தொடர்பு மற்றும் பல்ஊடக அமைச்சர்

11. சாலாஹூடின் ஆயோப்

விவசாயம் மற்றும் விவசாய அடிப்படையிலான தொழில்துறை அமைச்சர்

12. எம்.குலசேகரன்

தொழிலாளர் அமைச்சர்

13. டாக்டர் ஸூல்கிப்லி அமாட்

சுகாதார அமைச்சர்


Pengarang :