SELANGOR

இடைத்தேர்தல் குறித்து பேசுவதற்கு இன்னும் காலம் உள்ளது

சா ஆலாம்,ஜூலை03:

சுங்கை கண்டிஸ் சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து பேசுவதற்கு இன்னும் காலம் உள்ளது.மேலும்,இப்போதைய சூழலுக்கு அது குறித்து பேசுவது சிறப்பற்ற ஒன்று எனவும் மந்திரி பெசார் அமிரூடின் சாஹரி தெரிவித்தார்.அதன் சட்டமன்ற உறுப்பினர் சுஹாய்மி சாஃபி காலமானதை தொடர்ந்து அத்தொகுதியில் எப்போது இடைத்தேர்தல் எனும் கேள்வி எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும்,நடப்பியல் சூழலில் அதற்கு இன்னும் காலம் இருப்பதாகவும் சுஹாய்மி சாஃபியின் மரணம் எதிர்பாராதது என்றும் கூறிய மந்திரி பெசார் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு பின்னர் அதன் சடங்குகள் அனைத்தும் முடிவுற்ற பின்னரே இடைத்தேர்தல் குறித்து விவாதிக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.

மூன்று நாட்களுக்கு பின்னரே சிலாங்கூர் மாநில சட்டமன்றமும் தேர்தல் ஆணையமும் இடைத்தேர்தலுக்கான அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து துரித நடவடிக்கையினை மேற்கொள்ளும் என்றும் மந்திரி பெசார் குறிப்பிட்டார்.இடைத்தேர்தல் குறித்து உடனடியாக முடிவு எடுப்பது என்பது அவசியமற்றது.அஃது சுஹாய்மி சாஃபியின் நல்லுடலுக்கு மரியாதை அளிக்காமல் போவதற்கு ஈடானது என்றும் விவரித்தார்.

எனவே,இடைத்தேர்தல் குறித்து இன்னும் எந்தவொரு முடிவு எடுக்கப்படவில்லை.சுங்கை கண்டிஸ் சட்டமன்ற அலுவலகம் எப்பவும் போலவே இயல்பு நிலையில் இயங்கும் என்றும் அதனை தாமே நேரடியாய் பார்வையிடுவேன் என்றும் மந்திரி பெசார் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.


Pengarang :