NATIONAL

மேலும் 5 சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புத்ராஜெயாவில்…

சா ஆலாம்,ஜூலை 03:

புதிய அமைச்சரவையில் சிலாங்கூர் மாநிலத்தை சார்ந்த மேலும் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகவும் துணையமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.அவர்களில் டாக்டர் சேவியர் ஜெயகுமார் நீர்,நிலம் மற்றும் இயற்கை வள அமைச்சராகவும் சா அலாம் நாடாளுமன்ற உறுப்பினர் காலீட் அப்துல் சமாட் கூட்டரசு பிரதேச அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர்.

அதேவேளையில்,பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஓங் கியான் மிங் அனைத்துலக வாணிக தொழில் துறையின் துணையமைச்சராகவும் அவரோடு சிப்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் ஹனிபா மைதீன் பிரதமர் துறை துணையமைச்சராக சட்டத்துறைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும்,புறநகர் மேம்பாட்டுத்துறையின் துணையமைச்சராக சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி (பொருளாதார விவகாரத்துறை அமைச்சர்),கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் சாபு (தற்காப்பு அமைச்சர்),அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் சுராய்டா கமாரூடின் ( வீடமைப்பு ஊராட்சித்துறை), கோலாசிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜூல்கிப்ளி அகமது (சுகாதார அமைச்சர்) மற்றும் பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந் சிங் (தொடர்பு,பல்லூடகத் துறை) ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :