SELANGOR

ஸ்மார்ட் சிலாங்கூர் 360` சுற்றுப்பயணத்தின் இரண்டாவது தொடரில் 10,000க்கு இலக்கு

ஷா ஆலம்,நவ09:

ஸ்மார்ட் சிலாங்கூரின் 360` சுற்றுப்பயணத்தின் இரண்டாவது தொடர் பத்தாங் காலி ஓசிஸ் ஸ்ட்ரெட் பேராங்கடியில் நடைபெறவிருக்கும் வேளையில் இம்முறை இதில் 10,000 பேர் கலந்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வினை மாநில மந்திரி பெசார் இன்கோப்ரெஷன்,யுனிசெல்,மாநில அரசாங்கம் மற்றும் சிலாங்கூர் மாநில நூலகம் என கைகோர்ந்து நடத்திடும் வேளையில் இஃது கானிவேல் நிலையில் வரும் நவம்பர் 17 மற்றும் 18 என இருநாட்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநில அரசாங்கத்தின் ஸ்மார்ட் சிலாங்கூர் திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்வதோடு மாநில அரசாங்கம் மற்றும் அது சார்ந்தவைகளும் மக்களோடு சுமூகமான நல்லுறவினை மெய்பிக்கவும் வளர்க்கவும் ஒரு பாலமாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக யுனிசெல் பலகலைக்கழகத்தின் பொது உறவு நிர்வாகி ஹஸ்ரி அபு ஹசான் விளக்கினார்.
இதற்கு முன்னர் இதன் முதல் தொடர் பந்தாய் ரெமிஸ் பகுதியில் நடைபெற்றதை நினைவுக்கூர்ந்த அவர் இம்முறை பந்தாங்காலியில் நடைபெறும் இரண்டாவது தொடர் முற்றிலும் மாறுப்பட்டும் இருக்கும் என்றார்.சிறுவர் முதல் பெரியவர் வரை கலந்துக் கொள்ள பல்வேறு நிகழ்வுகளும் போட்டிகளும் இடம் பெறுவதோடு மாநில அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்களிலும் பங்கெடுக்கவும் இஃது பெரும் வாய்ப்பாக அமையும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து இத்திட்டம் அதன் இலக்கை அடைய பொது மக்கள் திரளாக வருகை புரிந்து மாநில அரசாங்கத்தின் இலக்கிற்கு உறுதுணையாக இருந்து மாநில வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பங்காற்றுவதோடு மக்களும் முன்னேற்றம் காண வழிச செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


Pengarang :