NATIONAL

பாக்காத்தான் ஹராப்பானின் முதல் வரவுசெலவு திட்டம் – நாட்டின் வலுவாகவும் மக்களை வளமாகவும் மெய்பிக்கும்

பாக்காத்தான ஹராப்பான் அரசாங்கத்தின் முதல் வரவு செலவு திட்டம் நாட்டை வலுவாகவும் நாட்டு மக்களை வளமாகவும் அதேவேளையில் நாட்டின் அடுத்த தலைமுறையையும் செழிப்பான இலக்கை நோக்கி கொண்டு செல்லவும் வழி செய்திருப்பதாக பிரதமர் துன் மகாதீர் தெரிவித்தார்.
அதேவேளையில்,நாட்டின் பொருளாதாரத்தை வியப்பூட்டும் நிலைக்கு உயர்த்தவும் இந்த புதிய வரவு செலவு திட்டம் வழி செய்திருப்பதாகவும் நாட்டின் பொருளாதாரம் விரைவில் சிறந்த நிலைக்கு உயரும் என்றும் நம்பிக்கை தெரிவித்த மகாதீர் புதிய மலேசியா இதனை உறுதி செய்யும் என்றும் குறிப்பிட்டார்.
நடப்பில்,பாக்காத்தான் அரசாங்கம் புதிய வியூகத்தை அமைத்து வருவதோடு முந்தைய செயல்முறைளை மறு ஆய்வு செய்து அதனை மீண்டும் புதிய சிந்தனையோடு வடிவமைக்கும் செயல்பாட்டினை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.
மேலும்,நாட்டின் புதிய கொள்கை மீண்டும் நாட்டை பொருளாதார நிலைக்கும் உயர்த்தும் என்றும் அதேவேலையில் இந்த முதல் பட்ஜெட் அனைத்து தரப்பிற்கு உகர்ந்த பட்ஜெட்டாகவும் அதேவேளையில் தனியார்துறைகளும் நாட்டின் மேம்பாட்டிற்கு பங்களிப்பு செய்திடும் நிலையில் அமைந்திருப்பதாகவும் கூறினார்.தொடர்ந்து கூறிய அவர் நாட்டின் புதிய வரவு செலவு திட்டமும் புதிய கொள்கையும் முதலீட்டாளர்களுக்கு பெரும் நன்மையை அளிப்பதோடு அவர்களின் வர்த்தகத்தை பொருளாதார நிலையில் லாபகரத்தை உருவாக்கும் என்றும் உத்தரவாதம் அளித்தார்.
அதேவேளையில்,புதிய மலேசியா நாட்டின் பொருளாதாரத்தை சிறந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான அனைத்து சாத்திய கூறுகளையும் ஆராய்ந்து அதன் அடிப்படையில் அதனை மறுமலர்ச்சிக்கு வித்திடுவதாகவும் கூறிய மகாதீர் வெளிநாட்டு முதலீட்டாளர்களை அதிகமாக கவர்வதோடு நாட்டின் முதலீட்டையும் விவேகமாய் மேற்கொள்வதும் அதில் அடங்கும் என்றார்.
நாட்டின் முதலீடு ஒரு வட்டத்திற்குள் அடங்கிடாமல் அஃது விரிவடைய வேண்டிய அனைத்து சாத்திய செயல்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.அதன் மூலம் பொருளாதார நிலை மட்டும் உயர்வதோடு மட்டுமின்றி அனைத்து தரப்பின் வாழ்வியல் சூழலும் பெரும் நன்மையை நோக்கி நகரும் எனவும் கருத்துரைத்தார்.
உலக அளவில் எந்தவொரு இடையூறும் இன்றி நாம் பொருளாதாரத்தில் சிறந்த நிலைக்கு உயரவும் நமது இலக்கை எட்டவும் பாக்காத்தான் ஹராப்பானின் முதல் பட்ஜெட் வழி செய்திருப்பதாக துன் மகாதீர் பெரும் நம்பிக்கையோடு பதிவு செய்தார்.


Pengarang :