SEREMBAN, 21 April — Menteri Pengangkutan Anthony Loke Siew Fook (tengah) menandatangani sepanduk acara ketika melancarkan Pembukaan Program Karnival Sukan Harapan Dewan Undangan Negeri (DUN) Ampangan malam ini. Turut hadir ADUN Ampangan Dr Rafie Ab Malek (kanan). –fotoBERNAMA (2019) HAK CIPTA TERPELIHARA
SELANGOR

சட்டவிரோத நெகிழி தொழிற்சாலைகள் ஜூன் மாத இறுதிக்குள் துடைத்தொழிக்கப்படும்

ஷா ஆலம், ஏப்.22-

சிலாங்கூரில் வரும் ஜூன் மாதத்திற்குப் பின்னர் சட்டவிரோத நெகிழி தொழிற்சாலைகள் இருக்கக் கூடாது என்ற இலக்கை மாநில அரசு கொண்டிருப்பதாக ஊராட்சி, பொது போக்குவரத்து மற்றும் புது கிராம மேம்பாட்டுக்கான ஆட்சி குழு உறுப்பினர் இங் ஸி ஹான் தெரிவித்தார்.

இதுவரை கடுமையான அமலாக்க நடவடிக்கை வழி இதுவரை 48 சட்ட விரோத தொழிற்சாலைகள் மூடப்பட்டதோடு அந்தப் பகுதிகளைத் துப்புரவுபடுத்தும் பணி சமூகமாக நடைபெற்று வருவதாக அவர் சொன்னார்.

இதனிடையே, ஊராட்சி மன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்ட 6 இடங்களில் 107 சட்ட விரோத நெகிழி தொழிற்சாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இங் கூறினார்.

அந்த எண்ணிக்கையில், கோலசிலாங்கூர், உலு சிலாங்கூர், ஷா ஆலம் மற்றும் கிள்ளான் ஆகிய பகுதிகளில் உள்ள 99 தொழிற்சாலைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


Pengarang :