Pelajar UNISEL pada majlis Ikrar Pelajar Baharu di kampus Bestari Jaya, Kuala Selangor. Foto Facebook UNISEL
NATIONALSELANGOR

சிறந்த பண்பு நெறி கொண்ட மாணவர்களாக உருவெடுப்போம்! – யுனிசெல் மாணவர்கள் உறுதிமொழி

ஷா ஆலம், ஆக.21-

யுனிசெல் எனப்படும் சிலாங்கூர் பல்கலைக்கழகத்தில் புதிதாக சேர்ந்துள்ள மாணவர்கள் தங்களை உயர்க்கல்வி கூட சூழலுக்கு பழக்கப்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய ஒரு வார கால அறிமுக நிகழ்ச்சியின்போது பட்டதாரி மாணவர்கள் தங்கள் கலாச்சார பண்புகளையும் நாகரீக பழக்க வழக்கங்களையும் வெளிப்படுத்தினர்.

கடந்த 17ஆம் தேதி தொடங்கி 4 நாட்களுக்கு நடைபெற்ற மாணவர்களைப் பழக்கப்படுத்தும் வார நிகழ்ச்சி யுனிசெல் பல்கலைக்கழகத்தின் சமூக அமைப்பு மற்றும் மாணவர் மேம்பாட்டு பிரிவின் கண்காணிப்பின் கீழ் நடைபெற்றதாக அப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரும் தலைவருமான பேராசிரியர் டத்தோ டாக்டர் முகமது ரெட்சுவான் ஓஸ்மான் கூறினார்.

இந்த அடிப்படை பண்புகளைக் கொண்டு மாணவர்கள் தங்கள் கற்றல் திறனை மேம்படுத்திக் கொள்வதோடு உயர்ந்த பண்பு நெறி கொண்டவர்களாகவும் உருவாகுவர் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்த மாணவர்கள், எதிர்காலத்தில் தாங்கள் சிறந்த பட்டதாரி மாணவர்களாக உருவெடுப்பர் என்று மிகுந்த உற்சாகத்தோடு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்


Pengarang :