RENCANA PILIHANSELANGOR

வளங்களைப் பகிர்வோம், கொள்கையை பிரதிபலிக்கும் ஐபிஆர் திட்டங்கள்

ஷா ஆலம், ஆக.28-

பெடூலி செஹாட் நடைமுறை (ஐபிஆர்) மீண்டும் தொடர்வதானது வளங்களைப் பகிர்வோம் என்ற பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது அடிக்கடி வலியுறுத்தும் கொள்கைக்கு ஏற்ப அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த பத்தாண்டு காலமாக மக்கள் நல மாநிலமாக சிலாங்கூர் திகழ்வதற்குக் காரணம் இம்மாநிலம் பிறந்த குழுந்தை முதல் மூத்த குடிமக்கள் வரை அனைத்து மக்களுக்கும் நன்மையளிக்கும் 42 வகையான திட்டங்களே ஆகும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.

“உண்மையாக உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. குறைந்த வருமானம் பெறும் தரப்பினரோடு நின்றுவிடாமல் நடுத்தர வருமானம் பெறும் மக்கள் மீதும் அரசு கவனம் செலுத்தி வருகிறது” என்றார் அவர்.

கல்வி மற்றும் தொழில்துறை ஆகியவற்றுக்கு உதவி வழங்குவது அரசாங்கத்தின் முக்கிய இலக்காகும் என்று சிலாங்கூர் பொருளாதாரத்தை மேலும் வளப்படுத்துவோம் என்ற தலைப்பிலான கலந்துரையாடல் நிகழ்ச்சியின் ஆற்றிய உரையின்போது அமிருடின் குறிப்பிட்டார்.


Pengarang :