Sambutan Hari Kebangsaan Ke-62 di Putrajaya pada 31 Ogos 2019. Foto JABATAN PENERANGAN MALAYSIA
NATIONALRENCANA PILIHAN

சுதந்திர தின கொண்டாட்டத்தில் மக்களின் ஒற்றுமை உணர்வைக் கண்டு அமைச்சர்கள் பெருமிதம் கொண்டனர்

புத்ராஜெயா , ஆகஸ்ட் 31:

சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு இனங்களை சேர்ந்த  மக்களின் நாட்டுப்பற்று மற்றும் அர்ப்பணிப்பை கண்டு அமைச்சர்கள் பெருமிதம் கொண்டார்கள். மலேசிய மக்களின் இந்த ஒருங்கிணைந்த சிந்தனைதான் நாட்டின் மேம்பாட்டிற்கான அடித்தளமாக அமையும் என்று அமைச்சர்கள் தெரிவித்தனர்.

புத்ராஜெயாவில் நடைபெற்ற 62-வது சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சிகளை ஒற்றுமையாக கண்டு களித்த பல்லின மக்களின் செயல்பாடு நாட்டின் முன்னேற்றத்திற்கு வித்திடும் என்று பொருளாதார விவகார அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார்.

பல்வேறு இனங்கள் வாழ்கின்ற மலேசிய நாட்டில் ஒற்றுமை உணர்வு ஒரு சவாலான விஷயம், ஆனாலும் அனைவரும் அரசாங்கத்துடன் இணைந்து ஒருமைப்பாட்டை நிறுவுவதில் முனைப்பு காட்ட வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.


Pengarang :