Dato’ Mohd Sayuthi Bakar telah menyerahkan baucar bernilai RM300 kepada 60 keluarga untuk membeli peralatan sekolah
PBTSELANGOR

மீண்டும் பள்ளிக்குச் செல்ல ஷாப்பிங் செய்வோம்’ பற்றுச்சீட்டுகளை 60 குடும்பங்கள் பெற்றன!

சுபாங் ஜெயா, டிச.5-

நகர்ப்புற ஏழ்மை ஒழிப்பு திட்டத்தின் கீழ் மீண்டும் பள்ளிக்குச் செல்ல ஷாப்பிங் செய்வோம் நிகழ்ச்சியை பெட்டாலிங் ஜெயா நகராண்மைக் கழகம் ஏற்பாடு செய்தது. மாதந்தோறும் 2 ஆயிரம் ரிங்கிட்டிற்கும் குறைவான வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உதவும் திட்டம் இதுவாகும்.
யுஎஸ்ஜே ஜயண்ட் ஹைப்பர்மார்க்கெட்டில் நேற்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இம்மன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 60 குடும்பங்கள் பங்கேற்றன் என்று எம்பிபிஜே அதன் முகநூல் பக்க்கத்தில் தெரிவித்தது.

பள்ளி மாணவர்கள் சீருடை, காலணி மற்றும் பள்ளி உபகரணப் பொருட்கள் வாங்குவதற்கான 300 ரிங்கிட் மதிப்பிலான பற்றுச்சீட்டுகளை சம்பந்தப்பட்ட 60 குடும்பங்களிடம் பெட்டாலிங் ஜெயா டத்தோ பண்டார் டத்தோ முகமது சாயூத்தி பாக்கார் வழங்கினார்.

இந்த பற்றுச்சீட்டுகள், சம்பந்தப்பட்ட குடும்பங்களில் அதிக எண்ணிக்கையிலான பள்ளிச் செல்லும் பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்களின் நிதிச் சுமை குறைக்கும் எனத் தாம் நம்புவதாக அவர் சொன்னார்.


Pengarang :