Dato’ Menteri Besar, Dato’ Seri Amirudin Shari
NATIONALSELANGOR

பட்டதாரிகள் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் !- மந்திரி பெசார்

புத்ராஜெயா, டிச.19-

தங்கள் திறனாற்றலை வெளிப்படுத்தவும் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ளவும் இளைஞர்கள் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டனர். சவால்கள் எளிதாக இருப்பது போல் தோன்றலாம், ஆனால் அவை கனவுகளைக் கொண்டுள்ள இளைஞர்களின் தன்முனைப்பைப் பாதிக்கக் கூடியது என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“வாய்ப்புகள் அடுத்தவருக்கு மட்டும் வழங்கப்படுவது அல்ல, மாறாக, தனக்கு தானே வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். கல்வி கற்பதற்கும் வளர்ச்சியடைவதற்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தாவிடில் கனவுகள் யாவும் மண்ணோடு புதைந்து போகக் கூடும் என்றார்.

இங்குள்ள புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற லிம் கொக் விங் பல்கலைக்கழக பட்டமளிப்பு நிகழ்ச்சியில் மந்திரி பெசார் உரையாற்றினார். சவால்களை எதிர்கொள்ளும் தன்முனைப்பும் கனவுகளுமே தாம் இந்த இடத்தில் நிற்பதற்கு வழி வகுத்தது என்று அமிருடின் தெரிவித்தார்.

“சவால்கள் என்பது உடல் ரீதியாக தாங்கும் சக்தி, தொடர்ந்து அதிகாரம் செலுத்துவது அல்லது சற்றி இருப்பவர்களுக்கு வேலை பார்ப்பது மட்டுமல்ல, மாறாக, அது எண்ணம் மற்றும் கருத்து ஆகியவற்றுக்கும் தொடர்பானதும் ஆகும்” என்றார் அவர்.


Pengarang :