Dato’ Seri Amirudin Shari berucap ketika majlis Perasmian Penyerahan Projek Menaiktaraf Laluan (B49) Persiaran Mokhtar Dahari Daerah Petaling Selangor pada 10 Januari 2020. Foto FIKRI YUSOF/SELANGORKINI
SELANGOR

பட்ஜெட் 2020… மக்கள் பட்ஜெட்!

மாநில அரசாங்கம் 2020 பட்ஜெட்டில் சுமார் 2.33 பில்லியன் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் 1.13 பில்லியன் வெள்ளி அல்லது 48.56 விழுக்காடு மேம்பாட்டு செலவினத்திற்கானதாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

சிலாங்கூர் மாநிலத்தின் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சி காண்பதோடு நாட்டின் மேம்பாட்டிற்கு உந்துதலாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்காகவும் இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . விவேக மாநில கூறுகள், சேவை மற்றும் தயாரிப்பு துறை, நீடித்த சமூக மேம்பாடு,அரசாங்கத்தின் சரிவிகித நிதித் திட்டத்தை உறுதிப்படுத்துவது போன்றவற்றை அடிப்படையாகக் கொள்வதே மேம்பாட்டின் சரிவிகித கோட்பாடாகும்.

அவ்வகையில் “ மிகச் சிறந்த மாநிலம் சிலாங்கூர், கௌரவமான வாழ்க்கை “ எனும் கருப்பொருளிலான 2020 சிலாங்கூர் வரவு செலவு திட்டம் ஐந்து வியூகங்களைக் கொண்டுள்ளது.


Pengarang :