Syed Saddiq Syed Abdul Rahman
NATIONAL

கிமானிஸ் இடைத்தேர்தல்: தேசிய முன்னணியை வாரிசான் தோற்கடிக்கும்! – பெர்சத்து

கோத்தாபாரு, ஜன.13-

கிமானிஸ் நாடாளுமன்ற தொகுதியில் இவ்வாரம் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் பாரிசான் நேஷனல் வேட்பாளரை சபா வாரிசான் கட்சி வேட்பாளர் டத்தோ கரிம் புஜாங் தோற்கடிப்பார் என்று பார்ட்டி பெரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) கட்சியின் இளைஞர் அணி நம்பிக்கை கொண்டுள்ளது.

நடப்பு சபா அரசாங்கத்தின் அடைவுநிலையைக் கொண்டு பார்க்கும் போது, முதலமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஷாஃபி அப்டால் தலைமையிலான வாரிசான் கட்சியை கிமானிஸ் நாடாளுமன்ற தொகுதி வாக்காளர்கள் புறக்கணிப்பதற்கு காரணம் ஏதும் இல்லை என்றும் அப்பிரிவின் தலைவர் சயிட் சடிக் சயிட் அப்துல் ரஹ்மான் கூறினார்.

“மாநில அரசாங்க நிர்வாகத்தை வாரிசான் கைப்பற்றியது முதல் பல்வேறு புத்தாக்க நடவடிக்கைகள் சபாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவை நிச்சயம் கிமானிஸில் சிறந்ததொரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இடைத்தேர்தலில் வெற்றி பெறும் பிரகாசமாக உள்ளது” என்றார் அவர்.

“நானும் சில தடவை கிமானிஸ் சென்று வந்துள்ளேன். வாரிசானின் வெற்றிக்காக அனைத்து தரப்பினரும் கடுமையாக உழைத்து வருகின்றனர்” என்று இங்கு நடைபெற்ற கிளந்தான் மக்களுடன் நெருக்கம் எனும் நிகழ்ச்சிக்குப் பின்னர் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் சயிட் தெரிவித்தார்.

வரும் ஜனவரி 18ஆம் தேதி நடைபெறவிருக்கும் கிமானிஸ் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் கரீமை (வயது 67) எதிர்த்து தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ முகமது அலாமின் (வயது 48) போட்டியிடுகிறார்.


Pengarang :