KUALA LUMPUR, 14 Feb — Sebahagian struktur kondomunium 37 tingkat yang sedang dalam pembinaan di Taman Desa Jalan Klang Lama runtuh hari ini. Setakat ini empat mangsa dikesan terperangkap dalam runtuhan itu, dan seorang daripadanya berjaya dikeluarkan dan dihantar ke hospital untuk rawatan, menurut Pusat Gerakan Operasi Kuala Lumpur. –fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
NATIONALRENCANA PILIHAN

ஆடம்பர அடுக்குமாடி கட்டடம் இடிந்த சம்பவம்: ஒரு மாதத்தில் விசாரணை நிறைவுபெறும்!

கோலாலம்பூர், பிப்.19-

ஜாலான் கிள்ளான் லாமா, தாமான் டேசாவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 37 மாடி ஆடம்பர அடுக்குமாடி கட்டடத்தின் ஒரு பகுதி கடந்த வெள்ளிக்கிழமையன்று இடிந்து விழுந்த சம்பவம் மீதான விசாரணை இன்னும் ஒரு மாதத்தில் நிறைவுபெறும் என்று பொதுப் பணி அமைச்சர் பாரு பியான் கூறினார்.

சம்பவம் நடந்தது முதல் மலேசிய கட்டுமானத் தொழிதுறை மேம்பாட்டு வாரிய (சிஐடிபி) அதிகாரி கட்டுமானப் பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகிறார் என்றார் அவர்.
“இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கட்டுமானத் தொழில்துறையைச் சேர்ந்த அனைவரும் சம்பந்தப்பட்ட சட்டத் திட்டங்களை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று நினைவுறுத்த விரும்பிகிறேன்” என்றார்.

1994ஆம் ஆண்டு மலேசிய கட்டுமானத் தொழில்துறை மேம்பாட்டு வாரியத்தின் சட்டப் பிரிவு 33(டி) நடைமுறை அமலாக்க சான்றிதழ் மற்றும் பிரிவு 33 (ஏ) ஆகியவற்றின் கீழ் தொழிலாளர்களைப் பதிவு செய்திருப்பது மற்றும் பிரிவு 25இன் படி குத்தகையாளர் பதிவு விபரம் ஆகியவை குறித்து சிஐடிபி விசாரணை மேற்கொண்டு வருகிறது.


Pengarang :