Sejumlah 117 pokok buah-buahan ditanam di sekolah rendah dan menengah di bandar raya ini menerusi program Dusun@My Sekolah pada 4 Mac
PBTSELANGOR

எம்பிஎஸ்ஏ ஏற்பாட்டில் 117 பழ மரங்கள் நடப்பட்டன!

ஷா ஆலம், மார்ச் 11-

கடந்த மார்ச் 4ஆம் தேதி நடைபெற்ற டுசுன்@மை.செகொலா திட்டத்தின் மூலம் இந்த மாநகரில் உள்ள ஆரம்பம் மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் 117 பழ மரங்கள் நடப்பட்டன என்று ஷா ஆலம் மாநகராட்சி மன்ற தொடர்பு பிரிவி தலைவர் ஷாஹ்ரின் அகமது கூறினார்.

“இளைய தலைமுறை மத்தியில் இயற்கை சுற்றுச் சூழலை நேசிக்கும் பண்பை வளர்க்கவும் மரங்கள் நடவு குறித்த பயிற்சிகளை வழன்குவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்” என்றார் அவர்.
எம்பிஎஸ்ஏவின் இத்திட்டமானது சமூகத்தின் மத்தியில் சுற்றுச் சூழலை நேசிக்கும் பண்பை ஏற்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

முதல் கட்டமாக நடைபெற்ற டுசுன்@மை.செகொலா எனும் இவ்வியக்கத்தின் போது தாமான் துன் டாக்டர் இஸ்மாயில் ஜெயா தேசிய பள்ளி ( 27 மரங்கள்), புக்கிட் ராஹ்மான் [உத்ரா தேசிய பள்ளி ( 37 மரங்கள்), தேசிய பெஸ்தாரி பள்ளி ( 23 மரங்கள்) மற்றும் தேசிய இடைநிலை சுபாங் பெஸ்தாரி (30 மரங்கள்) ஆகிய பள்ளிகள் பங்கெடுத்தன.

இந்நடவடிக்கையின் போது மொத்த, 5,444 மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இங்கு ரம்புத்தான், டுரியான், கஸ்தீரி எலிமிச்சம், மாமரம் போன்ற மரச் செடிகள் இங்கு நடப்பட்டன.


Pengarang :