NATIONALRENCANA PILIHAN

ஏப்ரல் முதல் தேதி தொடங்கி ஆர்எஃப்ஐடி கட்டண முறை அமல் – பிளஸ் நிறுவனம்

ஷா ஆலம், மார்ச் 11-

தீபகற்ப மலேசியாவில் உள்ள மொத்தம் 83 டோல் சாவடிகள் மற்றும் கிழக்கு கரை
நெடுஞ்சாலை 2 பிளஸ் நெடுஞ்சாலை நிறுவனத்தின் டோல் சாவடிகளில் ஏப்ரல் முதல் தேதி தொடங்கி ஆர்எஃப்ஐடி கட்டண முறை அமலுக்கு வரும்.
1.7 மில்லியன் பயனீட்டாளர்கள் பயன்படுத்தும் நெடுஞ்சாலை பலதட வழிகளில் இந்த கட்டண
முறை அறிமுகம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் என்று பிளஸ் நிறுவன
நிர்வாக இயக்குநர் டத்தோ அஸ்மான் இஸ்மாடில் கூறினார்.

இந்த கட்டண முறையானது டச் அண்ட் கோ போன்று மதிப்பு அதிகரிக்கும்
சிரமத்தை ஏற்படுத்தாது. மாறாக, இணைய வழி டச் அண்ட் கோ முன் ரொக்க செயலி
அல்லது கைத் தொலைபேசி வழியாக தேவையான கட்டண தொகை நேரடியாக
அதிகரிக்கப்படும் என்று அவர் விவரித்தார்.
அதே வேளையில், டச் அண்ட் கோ மற்றும் ஸ்மார்ட் டேக் ஆகிய டோல்
கட்டண முறைகளும் தொடர்ந்து நடப்பில் இருக்கும் என்றார் அவர்.


Pengarang :