GEORGE TOWN, 8 Mac — Pemakaian penutup hidung dan mulut perlu dipakai dengan betul, khususnya apabila berada di tempat awam sebagai langkah pencegahan jangkitan COVID-19 yang kini melanda di seluruh dunia. Orang ramai kini mengambil langkah pencegahan ekoran penularan COVID-19 seperti mengelak daripada mengunjungi tempat tumpuan ramai, memakai topeng muka serta mengamalkan tahap kebersihan diri yang tinggi. ?–fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
NATIONALRENCANA PILIHANSELANGOR

சுவாசக் கவசத்தை அதிக விலைக்கு விற்ற மருந்தகத்திற்கு ரிம. 20,000 அபராதம்

கோலாலம்பூர், மார்ச் 13:

சுவாசக் கவசத்தின் கட்டுப்படுத்தப்பட்ட விலையைக் காட்டிலும் அதிகமான விலையில் விற்ற செலாயாங்கில் உள்ள மருந்தகம் ஒன்றுக்கு ரிம் 20,000 அபராதம் விதிக்கப்பட்டது.  சம்பந்தப்பட்ட அந்த மருந்தகம் 14 நாட்களுக்குள் அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக உள்நாட்டு வாணிப மற்றும் பயனீட்டாளர் விவகாரத் துறையின் கோம்பாக் கிளை தலைமை அமலாக்க அதிகாரி அஸ்லி அரிபின் கூறினார்.

அரசாங்கம் வரையறுத்த விலையைக் காட்டிலும் அதிக விலையில் சுவாச கவசம் விற்கப்படுவதாக பொது மக்கள் அளித்த புகாரின் பேரில் நேற்று மாலை 6.30 மணிக்கு திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.

“ஒரு வாடிக்கையாளர் போல் வேடமிட்ட அமலாக்க அதிகாரி ஒருவர் 2-பிஎல்ஒய் ரக சுவாசக் கவசத்தில் விலையைக் கேட்ட போது ஒரு கவசத்தின் விலை 1 ரிங்கிட் எனத் தெரிவிக்கப்பட்டது. அரசாங்கம் இதற்கு வரையறுத்த விலை 20 காசு மட்டுமே ஆகும்” என்றார் அவர்.

45 சுவாசக் கவசங்கள் அடங்கிய பொட்டலம் ஒன்று 45 ரிங்கிட் என அம்மருந்தகம் விற்க முற்பட்ட போது அதனை அமலாக்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


Pengarang :