阿米鲁丁(右4)巡视即将启用的FT29/FT31高架天桥情况。
SELANGOR

டெங்கில்- காஜாங் மாற்று வழி திறக்கப்பட்டது: பயனீட்டாளர்கள் நிம்மதி பெருமூச்சு

டெங்கில், மார்ச் 13:

டெங்கிலையும் காஜாங்கையும் இணைக்கும் 1.7 கிலோ மீட்டர் தூர சந்திப்பு சாலை நிறைவுபெற்றதைத் தொடர்ந்து தங்களின் பயண நேரம் பெரிதும் குறையுமென பயனீட்டாளர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த மாற்ற வழியானது பூச்சோங், சைபர்ஜெயா, புத்ராஜெயா, பண்டார் பாரு சாலாக் திங்கி, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம். கேஎல்ஐஏ-2 மற்றும் செலாத்தான் சிப்பாங் ஆகியவற்றை இணைக்கிறது.

சாலாக் திங்கியில் உள்ள தனது இல்லத்திற்கும் புத்ராஜெயாவுக்கும் இடையிலான தூரம் 20 கிலோமீட்டர் என்றாலும் பரபரப்பான நேரத்தில் அதனைக் கடப்பதற்கு 2 மணி நேரத்திற்கும் அதிகமான நேரம் எடுத்துக் கொள்ளும் என்கிறார் ஒரு பொது சேவை ஊழியரான நோர்ஹாஃபிஸா முகமது நோர் (வயது 36).

“இந்தப் புதிய பாதை திறக்கப்படுவதற்காக நான் பல காலம் காத்திருந்தேன்” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.
புத்ராஜெயாவுக்கும் விமான நிலையத்துற்கும் இடையிலான தூரம் 35 கிலோமீட்டர் மட்டுமே என்றாலும் இந்த மாற்றுச் சாலை திறக்கப்படுவதற்கு முன்னர் , இப்பகுதிகளை அடைவதற்கு 2 முதல் 3 மணி நேரம் ஆகும் என்கிறார் ஒரு வாடகை கார் ஓட்டுநரான கே.பழனிசாமி (வயது 64).
இதனால். பயணம் தாமதமடைவதாக பல பயணிகள் தங்களிடம் முறையிட்டுள்ளனர் என்றார் அவர்.


Pengarang :