RENCANA PILIHANSELANGOR

சிலாங்கூர் சட்டமன்ற கூட்டம்: கோவிட்-10 பரவலைத் தடுக்க சுகாதார பரிசோதனை அவசியம்!

ஷா ஆலம், மார்ச் 14:

மாநில சட்டமன்றத்திற்கு வருகையளிக்கும் அனைவரும் கோவிட்-19 தடுப்பு பரிசோதனைகளுக்கு உட்படுவது அவசியமாகும் என்று சிலாங்கூர் சட்டமன்ற சபாநாயகர் இங் சுவீ லிம் கூறினார்.
“சிலாங்கூர் மாநில சுகாதார துறையின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் இந்த கண்காணிக்கை நடவடிக்கையின் போது ஆரோக்கியம் குன்றியிருப்பவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுவர்” என்றார் அவர்.
“இங்கு வருகை புரியும் பணியாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஊடக்வியலாளர்கள் அனைவருக்கும் நான் கூறிக் கொள்வது ஒன்றுதான். உங்களுக்கு காய்ச்சல், இருமல் ஏது இருந்தால் இங்கு வருவதைத் தவிர்த்து விடுங்கள்“ என்றார் அவர்.

“வரும் 16ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி மாநில சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெறவிருக்கின்றனர். இக்கூட்டத்தை மாட்சிமை தங்கிய சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராஃபுடின் இட் ரிஸ் ஷா நிறைவு செய்வார். இக்கூட்ட அட்டவணையில் மாற்றம் ஏதும் இருந்தால், அது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்” என்று அவர் சொன்னார்.


Pengarang :