莎阿南市政厅
SELANGOR

உணவங்களைக் கண்காணிக்க அமலாக்க அதிகாரிகள் 2 ஷிப்ட் முறையில் பணிபுரிவர்!

ஷா ஆலம், மார்ச் 18-

நடமாட்ட கட்டுப்பாடு நடைமுறையில் இருக்கும் வரையில் 2 ஷிப்ட் வேலை நேரத்தை ஷா ஆலம் மாநகராட்சி மன்ற (எம்பிஎஸ்ஏ) அமலாக்கப் பிரிவு தோற்றுவித்துள்ளது. காலை 8.00 மணி தொடங்கி 5 மணி வரையிலும் மற்றும் பிற்பகல் 3 மணி தொடங்கி நள்ளிரவு 12 மணி வரையிலும் இரண்டு ஷிப்டுகளில் பணி வழக்க நடைமுறையைக் கண்காணிக்க 100 அமலாக்க அதிகாரிகள் உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று எம்பிஎஸ்ஏ அதிகாரி ரோஸாடி அகமது கூறினார்.

இக்கால கட்டத்தில் அமலாக்க அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட மாட்டார்கள். எனினும் சுகாதாரப் பிரிவின் ஒத்துழைப்போடு அனைத்து கடைகளின் நடவடிக்கைகளையும் கண்காணிப்பர் என்றார் அவர். தடையை மீறும் கடை நடத்துநர்களுக்கு உணவகத்தில் வாடிக்கையாளர் உணவருந்த அனுமதிக்க வேண்டாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்துவர் என்றார்.

உணவகங்களில் நெரிசலைத் தவிர்க்க வரிசை எண்கள் வழங்கலாம் அல்லது டிரைவ் துரு நடைமுறையைக் கையாளலம் என்றார் அவர். முன்னதாக, உணவகங்கள் தொடந்து செயல்பட அனுமதிக்கப் படுவதாகவும் ஆயுனும் அவை வாடிக்கையாளர்களுக்கு கிராப் அல்லது ஃபூட் பாண்ட முறைகளைப் பயன்படுத்து உணவுகளை விநியோகம் செய்ய மட்டுமே முடியும் என்று தேசிய சுகாதார பாதுகாப்பு மன்றம் அறிவித்தது.


Pengarang :