NATIONALRENCANA PILIHAN

50,000 பணியாளர்கள் நடமாடும் கட்டுபாடு ஆணையை கண்காணிப்பர் !!!

கோலா லம்பூர், மார்ச் 22:

ஏறக்குறைய 50,000 ஆயுதப்படை, காவல்துறை, ரேலா மற்றும் ஊராட்சி அமலாக்க பணியாளர்கள் கோவிட்-19 நோயால் அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுபாடு ஆணையை மக்கள் பின்பற்றுவதை கண்காணிப்பர் என்று மூத்த அமைச்சர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார். மாநில பாதுகாப்பு மன்றம் தவிர்த்து மாவட்ட பேரழிவு நிர்வாக மையமும் இணைந்து கட்டுபாடு ஆணையை கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

காவல்துறையின் தகவல்படி இதுவரை 90% பொது மக்கள் மட்டுமே இந்த நடவடிக்கையை பின்பற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது என்றும் மேலும் 10% என்பது ஏறக்குறைய 3.1 மில்லியன் பொது மக்கள் கோவிட்-19 நோயை பெரிதாக கருதவில்லை என வருத்தம் தெரிவித்தார்.

மத்திய அரசாங்கம் காவல்துறை மற்றும் ஆயுதப்படையை சந்தை, பேரங்காடியில் பணியில் ஈடுபட உள்ளதாக இஸ்மாயில் சப்ரி இன்று தற்காப்பு அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு அவர் கருத்துரைத்தார்.


Pengarang :