Pelanggan membeli makanan bungkus di Restoran L&S Food Corner, Bandar Baru Ampang ketika tinjauan berikutan Perintah Kawalan Pergerakan pada 22 Mac 2020. Foto FIKRI YUSOF/SELANGORKINI
SELANGOR

பிகேபிபிடி சரியான நடவடிக்கை, பொருளாதார வளர்ச்சியை பாதிக்காது !!!

ஷா ஆலம், மே 5:
சிலாங்கூர் மாநில அரசாங்கம் அமல்படுத்தியிருக்கும் மாற்றம் செய்யப்பட்ட நிபந்தனைக்குட்பட்ட நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபிபிடி) மிகவும் சரியான நடவடிக்கை ஆகும் என ஊராட்சி மன்ற ஆட்சிக்குழு உறுப்பினர் எங் ஸீ ஹான் கூறினார். இந்த நடவடிக்கை பொருளாதார வளர்ச்சியை பாதிக்காது என்று உறுதி அளித்தார். பிகேபிபிடி செயல்பாடுகளில் எல்லாவற்றையும் சீர்தூக்கி பார்த்த பிறகு பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எடுக்கப்பட்ட தீர்க்கமான முடிவாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
” எடுத்துக் காட்டாக மாநில அரசாங்கம் உணவகங்களில் சாப்பிடுவதற்கு தடை செய்ய காரணம் இது கோவிட்-19 பரவலை தடுக்க முயற்சியே ஆகும்,” என்றார்.
” மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு மக்களிடையே நம்பிக்கையில்லை. பல்வேறு விலக்குகளை பிகேபி நடவடிக்கையில் அறிவித்துள்ளது கோவிட்-19 நோய் பரவலை தடுக்க முடியாது. ஆனால், சிலாங்கூர் மாநிலத்தின் பிகேபிபிடி செயல்பாடுகள் தற்கால நிலைமைக்கு சரியான ஒரு தீர்வாக அமையும்,” என்று செகிஞ்சான் சட்ட மன்ற உறுப்பினரும் மற்றும் சிலாங்கூர் மாநில சபாநாயகருமான எங் சுவி லிம் கூறினார்.

 


Pengarang :