Sunway Piramid Wall” Foto: Remy
SELANGOR

சிலாங்கூர் சுற்றுலாத்துறை: நாளை முதல் சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்

ஷா ஆலம், ஜூன் 30:

மாநிலத்தில் கேளிக்கை பூங்காக்கள் தொடங்கப்பட்டதை அடுத்து நாளை முதல் சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என சிலாங்கூர் சுற்றுலாத்துறை தெரிவித்தது. அதன் தொழில்முறை தொடர்பு நிர்வாகி கூறுகையில், அனைத்து சுற்றுப் பயணிகளும் சீரான செயலாக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) பின்பற்றி நடக்க வேண்டும் என்று நினைவூட்டினார். இதன் வழி கோவிட்-19 தொற்று நோய் தாக்கத்தை தடுத்து நிறுத்த முடியும் என்று அவர் விவரித்தார்.

” அரசாங்கம் பல்வேறு தளர்வுகளை அறிவித்தவுடன் சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை ஜூலை மாதம் தொடர்ந்து அதிகரிக்கும். சன்வே லாகூன் நீர் கேளிக்கை மையம், ஐ-சிட்டி வாட்டர் வேர்ல்டு மற்றும் மோரிப் கோல்ட் கோஸ்ட் ஆகிய கேளிக்கை மையங்கள் பொது மக்களை ஈர்க்கும். கடந்த இரண்டு வாரங்களாக தங்கும் விடுதிகளின் முன் பதிவுகள் அதிகரித்துள்ளது.,” என்று அமாட் நஸ்ரி தாஸ்ரிக் ரஹ்மாட் சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.


Pengarang :