Tinjauan SelangorKini di Pasar Pagi MPSJ Bandar Puchong Jaya yang kembali dibuka susulan Perintah Kawalan Pergerakan Pemulihan (PKPP) pada 16 Jun 2020. Peniaga dan pengunjung dikehendaki mematuhi SOP yang disarankan. Foto FIKRI YUSOF/SELANGORKINI
RENCANA PILIHANSELANGOR

நோய் சம்பவங்கள் தொடர்ந்து குறைந்தாலும், அலட்சியமாக இருக்காதீர்கள்- எஸ்திஎப்சி

ஷா ஆலம், ஜூலை 11:

கோவிட்-19 தொற்று நோய் சம்பவங்கள்  சிலாங்கூர் மாநிலத்தில் குறைந்தாலும், மாநில மக்கள் அலட்சியமாக இருக்காதீர்கள் என அறிவுறுத்தப் படுகிறார்கள். இந்த ஆண்டு தொடக்கத்தில் பரவிய இந்த வைரஸ் இன்னும் முழுமையாக அழிந்து விடவில்லை என்று சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பு பணிக்குழு (எஸ்திஎப்சி) தெரிவித்துள்ளது. கோவிட்-19 வைரஸ் எந்த நேரத்திலும் மக்களிடையே பரவும் ஆற்றலைக் கொண்டது எனற நிதர்சனமான உண்மையை பொது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என அது நினைவு படுத்தியது.

” தற்போதைய சூழலில் அலட்சியமாக இருக்காதீர்கள். அதிகாரப் பூர்வ அறிவிப்பு வரும் வரையில் எச்சரிக்கையாக இருங்கள். நம்மிடையே இன்னும் கோவிட்-19 வைரஸ் இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் நோய் பரவலாம்,” என்று டிவிட்டரில் எஸ்திஎப்சி பதிவு செய்துள்ளது.

சிலாங்கூர் இன்று மூன்று புதிய கோவிட்-19 தொற்று நோய் சம்பவங்களை பதிவு செய்துள்ளது. அதில் இரண்டு செப்பாங் குடிநுழைவுத்துறை தடுப்பு முகாமில் ஏற்பட்டுள்ள அந்நிய நாட்டவர்களை சம்பந்தப்பட்ட சம்பவங்கள் ஆகும். இன்று வரை மொத்தம் 2,079 கோவிட்-19 தொற்று நோய் சம்பவங்கள் சிலாங்கூரில் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Pengarang :