NATIONAL

4,000 ஏக்கர் தரிசு நிலம் விவசாய நோக்கத்திற்காக மேம்படுத்தப்படும்

ஷா ஆலம், செப் 7-  பரந்த அளவில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக சுமார் 4,000 ஏக்கர் கைவிடப்பட்ட  நிலம் மேம்படுத்தப்படும்.

அரசாங்கம், அரசு சார்பு நிறுவனங்கள், அரசு துறைகள் மற்றும் தனியார் வசமுள்ள அந்த  நிலங்களை தாங்கள் அடையாளம்  கண்டுள்ளதாக விவசாயத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் இஸாம் ஹஷிம் கூறினார்.

விவசாயத் துறையை மேம்படுத்துவதற்கு நாம் மேற்கொண்டு வரும் முயற்சிகளில் இதுவும் அடங்கும். நில மீட்பு தொடங்கி விவசாய பொருள்களை சந்தைப்படுத்துவது வரையிலான விவகாரங்களை மாநில அரசு கவனித்துக் கொள்ளும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இங்குள்ள செத்தியா சிட்டி மாநாட்டுக்கு மையத்தில் நடைபெற்ற 2021 ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் விவசாயம் மீதான கலந்துரையாடலில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் இதனை சொன்னார்.

சம்பந்தபட்ட நிலங்களை மீட்பதில் உள்ள சட்ட அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளதால் இத்திட்டம் தொடர்பான முடிவை எடுக்க இன்னும் இரு மாதங்கள் ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 


Pengarang :