NATIONALSELANGOR

பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் விவசாயம், சுற்றுலாத் துறைக்கு முன்னுரிமை

ஷா ஆலம், செப் 7- கோவிட்-19 நோய் தொற்று பரவலுக்குப் பின் மாநிலத்தின்
பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறை மீது 2021ஆம
ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் கவனம் செலுத்தும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி கூறினார்.

ஆக்கத் திறன்மிக்க பொருளாதாரத்திற்கு உந்து சக்தியாக விளங்கும் துறைகள் மீது கவனம் செலுத்துவதன் மூலம் மக்கள் பயனடைவதை உறுதி செய்ய முடியும் என்றும் அவர் கூறினார்.

இன்று நடைபெற்ற 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மீதான கலந்துரையாடலில் கல்வியாளர்கள், நிபுணர்கள், தொழில்துறையினர் உள்ளிட்ட தரப்பினரின் கருத்துகளைக் கேட்டறிந்தோம். இது தவிர முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காகச் சிறப்பு சந்திப்புகளையும் நடத்தினோம். வரும் அக்டோபர் மாதம் 30ஆம் தேதி வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

இங்குள்ள செத்தியா சிட்டி மாநாட்டு மையத்தில் 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்
திட்டம் மீதான கலந்துரையாடல் நிகழ்வில் முக்கிய உரை நிகழ்த்திய போது மந்திரி புசார்
இவ்வாறு கூறினார்.

சிலாங்கூர் மாநில அரசு 2020ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு 233 கோடி
வெள்ளியை அங்கீகரித்திருந்த து. அதில் 48.56 விழுக்காடு அதாவது 113 கோடி வெள்ளி
மேம்பாட்டிற்கும் 51.44 விழுக்காடு அதாவது 120 கோடி வெள்ளி நிர்வாகச்
செலவினங்களுக்காகவும் ஒதுக்கப்பட்டது.


Pengarang :