Dato’ Teng Chang Khim. Foto ARKIB SELANGORKINI
SELANGOR

ஜூன் மாதம் வரை வெ. 1,160 கோடி முதலீடு சிலாங்கூரில் பதிவு

ஷா ஆலம், அக் 2-  இவ்வாண்டு ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் தயாரிப்பு மற்றும் சேவைத் துறைகளின் வாயிலாக 1,160 கோடி வெள்ளி மதிப்பிலான முதலீடுகளை சிலாங்கூர் ஈர்த்துள்ளது.

தயாரிப்பு துறை வாயிலாக 330 கோடி வெள்ளியும் சேவைத் துறை வாயிலாக 830 கோடி வெள்ளியும் பெறப்பட்டதாக முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை சற்று குறைவுதான். கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக முதலீட்டில் பாதிப்பு ஏற்படும் என நாங்கள் கணித்திருந்தோம் என்றார் அவர்.

கடந்தாண்டில் செய்யப்பட்ட முதலீட்டுக்கான விண்ணப்பங்கள் இன்னும் நிலுவையில் உள்ளதால் இந்த எண்ணிக்கை இன்னும் உயர்வு காணும் தாங்கள் எதிர் பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இலக்கவியல்மய மனித வள நிர்வாக திட்டத்தை தொடக்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனை தெரிவித்தார்.

இவ்வாண்டில் சுமார் 1,200 கோடி வெள்ளி மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்க மாநில அரசு இலக்கு நிர்ணயித்திருந்ததாக கூறிய தெங், கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக வெளிநாடுகளில் முதலீட்டு ஊக்குவிப்பு திட்டங்களை மேற்கொள்ள இயலாத சூழல் ஏற்பட்டதாக சொன்னார்.

 


Pengarang :