NATIONALSELANGOR

ம.இ.காவின் ஒரு நாடாளுமன்றப் பிரதிநிதியால் டத்தோ ஸ்ரீ அன்வாருக்கு எந்தச் சாதக-பாதகமும் இல்லை

ஷா ஆலம் 14 அக் :- பாரிசான் நேஷனலில் இன ரீதியான தலைமைத்துவத்திற்கு இடமுண்டு. அங்கு  இந்தியர்களைப் பிரதிநிதித்து ம.இ.கா வும், சீனர்களைப் பிரதிநிதித்து  ம.சீ.சவும் உள்ளன. ஆனால் ஜ.செ.க  மற்றும் கெஅடிலான் போன்ற கட்சிகள் பல இனச் சமுதாயத்தினைப் பிரதிநிதிப்பதாக இருப்பதால், இன ரீதியான பிரதிநிதித்துவத்தின் அவசியம் குறித்துக் கேள்வி எழுகிறது.

ஜ.செ.க  மற்றும் கெஅடிலான் போன்ற கட்சிகள் அதிகமான இந்திய ஆதரவாளர்களை மட்டும்  கொண்டுள்ளதோடு அல்லாமல், இந்தியர்களையும் பிரதிநிதித்து பெரிய எண்ணிக்கையிலான இந்திய வம்சவழி நாடாளுமன்றச் சட்டமன்ற உறுப்பினர்களையும் கொண்டுள்ளதை டான் ஸ்ரீ விக்னேஸ்வரன்  மறுக்க முடியாது.

ஆகையால் டான் ஸ்ரீ விக்னேஸ்வரனின் கருத்தோ அல்லது அவர் கட்சியின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவமோ டத்தோ ஸ்ரீ அன்வாருக்கு எந்தச் சாதக-பாதகங்களையும் கொண்டு வரப் போவதில்லை என்று குறிப்பிட்டார் சமூகப் பொருளாதாரம், சமுக நலன், தொழிலாளர் ஆற்றல்  துறைக்கான  சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரான மாண்புமிகு வீ,கணபதிராவ்.


Pengarang :