八打灵万达广场爆发新冠肺炎感染群,被令关闭14天以展开大规模筛检。
ECONOMYNATIONALPBTSELANGOR

சைபர் ஜெயாவில் சிலாங்கூர் வர்த்தக தலைநகர் திட்டம் -பொருளாதாரத்திற்கு உத்வேகம் அளிக்கும்

ஷா ஆலம், நவ 4- சைபர் ஜெயாவில் மேற்கொள்ளப்படவிருக்கும் சிலாங்கூர் வர்த்தக தலைநகர் திட்டம் (எஸ்.பி.சி.)  மாநிலத்தின் தென் பகுதியில் புதிய நகரத்தின் உருவாக்கத்திற்கு வழிகோலும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

புதிய நகரத்தின் உருவாக்கத்திற்கு தேவையான அனைத்து நவீன அடிப்படை வசதிகளையும் உருவாக்குவதை  அத்திட்டம் விரைவுபடுத்தும் என்று அவர் சொன்னார்.

அந்த புதிய பொருளாதார மையத்தை உருவாக்கும் பொறுப்பினை ஏற்றுள்ள பி.கே.என்.எஸ். எனப்படும் சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகம் இதற்கான விண்ணப்பத்தை அடுத்தாண்டு முதல் காலாண்டில் தாக்கல் செய்யும் என்றார் அவர்.

அந்த எஸ்.பி.சி. திட்டம் நில வடிவமைப்பை முழுமையாக மாற்றும் என நம்புகிறோம். பொருளாதாரத்திற்கு புதிய உத்வேகத்தை அளித்து மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பல்வேறு பலன்களை கொண்டு வரும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த திட்டத்தில் பங்கேற்கக்கூடிய விவேக பங்காளிகள் மற்றும் முதலீட்டாளர்களை அடையாளம் காணும் பணியில் தாங்கள் தற்போது ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இத்திட்டத்திற்கான முன்னோடி தொடக்க நிகழ்வை விரைவில் நடத்தவிருக்கிறோம். அதன் பின்னர் இதில் பங்கேற்கும் முதலீட்டாளர்களை கண்டறியும் நடவடிக்கையில் ஈடுபடுவோம் என அமிருடின் சொன்னார்.

இத்திட்டத்தை இவ்வாண்டில் தொடக்க தாங்கள் திட்டமிட்டிருந்ததாகவும் எனினும், கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக அத்திட்டத்தை தொடர்வதில் சுணக்கம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

சைபர் ஜெயாவில் 56 ஹெக்டர் நிலப்பரப்பில் இந்த வர்த்தக தலைநகர் திட்டம் உருவாக்கப்படுகிறது. இது புத்ரா ஜெயா, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் மற்றும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் 2 ஆகியவற்றுக்கு மத்தியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது.


Pengarang :