Ahli Dewan Negeri Batu Tiga, Rodziah Ismail berucap ketika Program Penerangan Jimat Air Selangor di Dewan Meranti Seksyen 19, Shah Alam pada 20 September 2020. Foto REMY ARIFIN/SELANGORKINI
ECONOMYPBTSELANGOR

ரிங்கிட் 3000 க்கு குறைந்த ஹிஜ்ரா கடன்களுக்கு விதி மறுபரிசீலனை!

ஷா ஆலம் நவ 4; – வீடமைப்பு, நகர்ப்புற நல்வாழ்வு மற்றும் தொழில் முனைவோர் துறைக்கான 2021  ஆம் ஆண்டு வரவு|செலவு ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் பங்கு கொண்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி  தெரிவித்து அதன் ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில்  இன்று சிலாங்கூர் சட்டமன்றத்தில் பதிலளித்தார்.

அதில் அவர் குறிப்பிட்டதாவது தொழில் முனைவர்களுக்கு மாநில அரசாங்கம் வாய்ப்புகள், உதவிகள், ஊக்குவிப்புகள் வழங்கும் போது, அவர்களின் இனம், சமயம், வயது, தொழில் முதலீடுகள் எவ்வளவு பெரியது அல்லது சிறியது என்பதனைக்  கருத்தில் கொள்வதில்லை, ஆனால் பாதிப்பு என்று வந்து விட்டால் அந்தப் பிரிவினரை அடையாளங்கண்டு உதவுவது சரியான தரப்பினருக்கு அந்த உதவிகள் சென்று சேர்வதை உறுதி படுத்துவதாகும்.

தொழில்துறைகளில் சிலாங்கூர் மக்கள் தொடர்ந்து வளர்ச்சிக்கான மாநில அரசு அதன் பணியைத் தொடர்ந்து மேற்கொள்ளும். அந்த அடிப்படையிலேயே சிறு மற்றும் புதிய தொழில் முனைவர்களுக்கு உதவும் வண்ணம் 3000 ரிங்கிட்டுக்குக் குறைந்த ஹிஜ்ரா உதவிகளுக்கு நிரந்தர வியாபாரத் தளம் வேண்டும் என்னும் விதிகளை அவர்கள் பரிசீலிக்கக் கோருவதாகவும் கூறினார்.

அதே போன்று, ஹிஜ்ரா மற்றும் நாடி என்னும் திட்டங்கள் வழி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு SSM என்னும் வர்த்தகப் பதிவு இன்றி நகராட்ச்சி மன்றங்களின் அனுமதியுடன் வியாபாரம் செய்யவும்  விதிமுறைகள் தளர்த்தப் பட்டுள்ளதாகக் கூறினார்

ReplyReply allForward

Pengarang :