ECONOMYNATIONALSELANGORWANITA & KEBAJIKAN

மீண்டும்”கிஸ் ”எனப்படும் பரிவுமிக்க அன்னையர் உதவித் திட்டத்தில் , பி40 பெண்களுக்கு மாதம் 200 வெள்ளி உதவித் தொகை

ஷா ஆலம், நவ 4– தனித்து வாழும் தாய்மார்கள் மற்றும் பி40 எனப்படும் ஏழ்மை நிலையிலுள்ள பெண்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கு ஏதுவாக மாதம் 200 வெள்ளி வழங்கப்படும்.

கிஸ் எனப்படும் ஸ்மார்ட் சிலாங்கூர்  பரிவுமிக்க அன்னையர் உதவித் திட்டத்தின் கீழ் இந்த தொகை அடுத்தாண்டும் தொடர்ந்து வழங்கப்படும். இத்திட்டத்திற்காக 6 கோடியே 20 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒதுக்கீடு தனித்து வாழும் தாய்மார்களுக்கான கிஸ் திட்டத்தின் 5,000 பங்கேற்பாளர்களையும் உள்ளடக்கியிருக்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக 42 விழுக்காட்டு தனித்து வாழும் தாய்மார்கள் வருமானத்தை இழந்துள்ளது மகளிர் திறன் கழகத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த 6.2 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீடு கீழ்க்கண்ட திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படும்.

  • சிலாங்கூர் மாநில அண்டை அயலார் நட்புறவு தொண்டூழிய திட்டத்திற்கு 300,000 வெள்ளி
  • மாநிலத்திலுள்ள 62 இந்திய சமூகத் தலைவர்களுக்கான அலவன்ஸ் மற்றும் நிதி ஒதுக்கீடு
  • பூர்வக் குடியினர் கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவற்கு 500,000 வெள்ளி.

Pengarang :