ECONOMYNATIONALSELANGOR

சிலாங்கூரில் இரு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசு உதவி- மந்திரி புசார் நன்றி

ஷா ஆலம், நவ 9- சிலாங்கூர் மாநிலத்தில் இரு மேம்பாட்டுத் திட்டங்களை
மேற்கொள்வதற்காக மத்திய அரசு தனது 2021ஆம் ஆண்டு வரவு செலவுத்
திட்டத்தில் நிதி ஒதுக்கியதற்காக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நன்றி
தெரிவித்துக் கொண்டார்.
மூன்றாவது கிள்ளான் பாலத்தின் இரண்டாம் கட்டத் திட்டம் மற்றும் மூன்று
பூலாவ் இண்டா சுற்றுவட்டத்திட்டங்களுக்கு நிதியுதவி கோரி மாநில அரசு
ஏற்கனவே மனு செய்திருந்ததாக அவர் சொன்னார்.
இவ்விவகாரம் தொடர்பில் கடந்த ஈராண்டுகளாக மத்திய அரசுடன் பேச்சு நடத்தி
வந்தோம். இத்திட்டங்களுக்காக பெருந் தொகையை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது
குறித்து மகிழ்ச்சிடைகிறோம் என்றார் அவர்.
கம்போங் தாமான் ஸ்ரீ நண்டிங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களைச் சென்று
கண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இரு அடிப்படை வசதித் திட்டங்கள் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளுக்காக
மத்திய அரசு 380 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்வது தொடர்பான அறிவிப்பை
நிதியமைச்சர் துங்கு ஜப்ருள் துங்கு அப்துல் அஜிஸ் வெளியிட்டிருந்தார்.

Pengarang :