ECONOMYNATIONALPBTSELANGOR

மாற்றுத் திறனாளிகளை வலுப்படுத்தும் திட்டத்திற்கு முன்னுரிமை- மந்திரி புசார் தகவல்

ஷா ஆலம், டிச 4- மாற்றுத் திறனாளிகளை வலுப்படுத்தும் திட்டங்களை மேற்கொள்வதன் வாயிலாக மாநிலத்தின் வளர்ச்சியை மேலும் பொருள் பொதிந்ததாக ஆக்க முடியும் என்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மாற்றுத் திறனாளிகள் விவகாரம் சமூக நலன் மட்டும் சார்ந்தது அல்ல. மாறாக, சுகாதாரம், கல்வி,சட்டம், வேலை வாய்ப்பு, அடிப்படை வசதிகள் ஆகிய அம்சங்களையும் அது உள்ளடக்கியுள்ளது என்று அவர் சொன்னார்.

மாற்றுத் திறனாளிகளின் ஆற்றல் மாநிலத்தின் சுபிட்சம் என்பது பிரதான 
கருப்பொருளாகவும் மாநிலத்தின் முதன்மை கோட்பாடாகவும் விளங்குகிறது. 2020 மாற்றுத் திறனாளிகள் தின வாழ்த்துக்கள் என்று தனது முகநூலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்துலக மாற்றுத் திறனாளிகள் தினம் ஒவ்வொராண்டும்  டிசம்பர் 3 ஆம் தேதி 
அனுசரிக்கப்படுகிறது. மலேசியாவில் கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் இந்த தினம் 
அனுசரிக்கப்படுகிறது.

மாற்றுத் திறனாளிகளின் மேம்பாட்டுக்காக மாநில அரசு  2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் 32.5 வெள்ளியை ஒதுக்கியுள்ளது.  அனிஸ் எனப்படும் சிலாங்கூர் குடிமகன் உதவித் திட்டத்தின் வாயிலாக அத்தரப்பினருக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன.

Pengarang :