ECONOMYNATIONALPress StatementsSELANGOR

அமானா சஹாம் பூமிபுத்ரா  (ASB) க்கான சிறப்பு ஈவுத்தொகையை குறைந்த வருமான பிரிவினர்களுக்கு  வழங்குக 

ஷா ஆலம் டிச 24 : குறைந்த வருமானம் பெறும்  (B40) மற்றும் நடுத்தர  வருமானம் பெறும்  (M40) பிரிவினர்களுக்கு  முன்னுரிமை வழங்குவதாக  அமானா சஹாம் பூமிபுத்ரா  (ASB) க்கான சிறப்பு ஈவுத்தொகையை  இருக்க வேண்டும்.

பெரிய முதலீடுகளைக் கொண்ட யூனிட் வைத்திருப்பவர்களுடன் ஒப்பிடும்போது சம்பந்தப்பட்ட குழுவிற்கு அதிக லாபம் கிடைப்பதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கை என்று செத்தியாவாங்சா  நாடாளுமன்ற  உறுப்பினர்  நிக் நஸ்மி கூறினார்.

கடந்த 2018 ஆம் ஆண்டின் கணக்கின்படி கிட்டத்தட்ட 80 சதவீதம் அல்லது 7.4 மில்லியன் ஏஎஸ்பி யூனிட்  பங்குகளை வைத்திருப்பவர்கள்  ரிங்கிட் 5,000 மதிப்பீட்டுக்கும் குறைவாகவும், 0.24 சதவீதம் பேர்  ரிங்கிட் 500,001 அதற்கு மேலான  மதிப்பீட்டுக்கு உரியப்  பங்குகளைக்  கொண்டிருப்பதாகவும் நிக் நஸ்மி நிக் அகமது விளக்கினார்.

அவரைப் பொறுத்தவரை, பி 40 இல் உள்ள ஏஎஸ்பி யூனிட் வைத்திருப்பவர்கள்  ரிங்கிட் 4.1 பில்லியன் மட்டுமே வைத்திருக்கிறார்கள், முதல் 9.15 சதவீதம் பேர் யூனிட் டிரஸ்ட் ஃபண்டுகளில்  ரிங்கிட் 127.5 பில்லியன் வைத்திருக்கிறார்கள்.

பார்டி கெஅடிலன் ராக்யாட்டின் (கெஅடிலான்) தலைமை நிர்வாகச் செயலாளருமான  நிக் நஸ்மி  மேலும் கூறுகையில்”ஏஎஸ்பியின் அணுகுமுறை அதன் தொடக்கத்திலிருந்தே ஒரே மாதிரியாக  இருந்து வருகிறது.

அதில்  மாற்றங்கள் இருக்க வேண்டும்,பெரிய  லாப ஈவுகள்  பூமிபுத்ரா  பி 40 மற்றும் எம் 40 பிரிவினர்  பெறுவது  சிறப்பாகும் என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

“சிங்கப்பூர் மத்திய வருங்கால வைப்பு நிதியத்தால் செயல்படுத்தப்படும் பி 40 மற்றும் எம் 40 கணக்குகளுக்கான  அணுகுமுறை கொள்கைகளைப்  பெர்மோடாலான் நேஷனல் பெர்ஹாட் (பிஎன்பி) பின்பற்ற வேண்டும். அதுபோன்று பல அடுக்கு ஈவுத்தொகைகளை உருவாக்க வேண்டிய நேரம் இது என்று நான் நினைக்கிறேன் என்றார்  அவர்.

2020 டிசம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான ஏஎஸ்பி யூனிட் நிதிகளுக்கு ஒரு யூனிட்டுக்கு 5.0 சென் வருமான விநியோகத்தைப் பிஎன்பி இன்று அறிவித்துள்ளது.

வருமானம் ஒரு யூனிட்டுக்கு 4.25 சென் மற்றும் ஏஎஸ்பியின் 30 வது ஆண்டு நிறைவுடன் இணைந்து முதல் 30,000 யூனிட்களுக்கு எஹ்சான் ஒரு யூனிட்டுக்கு 0.75 சென் விநியோகித்தது.

 


Pengarang :