ALAM SEKITAR & CUACASELANGOR

உலு சிலாங்கூரில் வெள்ளம்-84 பேர் நிவாரண மையங்களுக்கு மாற்றம்

ஷா ஆலம், ஜன 4- வெள்ளம் காரணமாக உலு சிலாங்கூரில் உள்ள நான்கு கிராமங்களைச் சேர்ந்த 84 பேர் தற்காலிக நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டனர்.

நேற்று காலை முதல் பெய்த மழை காரணமாக செலிசெக் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கம்போங் மஸ்ஜிட், கம்போங் செகோலா, கம்போங் பாயா லெபார், கம்போங் சுங்கை நீலாம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த அந்த 84 பேரும் கம்போங் செலிசெக் பொது மண்டபத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் நோராசாம் காமிஸ் கூறினார்.

வெள்ளம் தொடர்பான தகவல் நேற்று மாலை 4.07 மணியளவில் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து கோல குபு பாரு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையைச் சேர்ந்த பத்து பேர் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியை மேற்கொண்டதாக அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக செலிசெக் கிராமத்தில் வெள்ளம் உயர்ந்து வருவதால் மேலும் அதிகமானோர் நிவாரண மையங்களுக்கு மாற்றப்படுவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :