ECONOMYNATIONALPBTSELANGOR

37 தொழிற்சாலைகளை மூட நகராண்மைக்கழகம் உத்தரவு! எஸ்.ஓ.பி. மீறல்

ஷா ஆலம், ஜன 29- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட எஸ்.ஓ.பி. எனப்படும் சீரான நிர்வாக நடைமுறைகளை மீறிய காரணத்திற்காக கிள்ளான் நகராண்மைக்கழகம் 37 தொழிற்சாலைகளை மூட உத்தரவிட்டது.

கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் கடந்த புதன் கிழமை வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் இத்தொழிற்சாலைகள் மூடப்பட்டதாக கிள்ளான் நகராண்மைக்கழகத் தலைவர் டாக்டர் அகமது பாட்சில் அகமது தாஜூடின்  கூறினார்.

கிள்ளான் மாவட்ட சுகாதாரத் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகளின் போது 104 தொழிற்சாலைகள் மீது சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.

கிள்ளான் வட்டாரத்தில் கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு இத்துறை சார்ந்த  தொழிலாளர்கள்  முக்கிய காரணமாக உள்ளதால் தொழிற்சாலைகளை மையமாக க் கொண்ட சோதனை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

உற்பத்தித் துறை வழக்கம்  போல் செயல்பட அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தொழிற்சாலைகள் மீதான எஸ்.ஒ.பி. கண்காணிப்பு சோதனைகளை  தாங்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் நான்கு இடர் மதிப்பீட்டு அம்சங்கள் மீது நாங்கள் கவனம் செலுத்துகிறோம். வேலையிடங்களில் மற்றும் தங்கும் விடுதிகளில் நோய்த் தொற்று பரவும் அபாயம், சுற்றுச்சூழல் மற்றும் மனித தவறுகள் ஆகியவையே அந்த நான்கு அம்சங்களாகும் என்றார் அவர்.


Pengarang :