掌管工商、投资及中小企业事务的雪州行政议员拿督邓章钦。
ECONOMYNATIONALSELANGOR

சிலாங்கூரின் பொருளாதார வளர்ச்சிக்கு வான் போக்குவரத்துத் துறை உதவும்

ஷா ஆலம், பிப் 3– சிலாங்கூர் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிப்பதில் வான் போக்குவரத்து துறை சிறந்த முதலீடாக விளங்குவதாக  முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

விமானம் சார்ந்த துறையை மேம்படுத்துவதில்  சிலாங்கூர் கூடுதல் அனுகூலங்களைக் கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.

நமது மாநிலத்தில் இரு பெரிய விமான நிலையங்கள் உள்ளன. சிப்பாங்கிலுள்ள கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம்  மற்றும் சுபாங், சுல்தான் அப்துல் அஜிஸ் விமான நிலையம் ஆகியவையே அவையாகும் என்றார் அவர்.

விமானங்களை பழுதுபார்ப்பது, பராமரிப்பது போன்ற பணிகளை மேற்கொள்ளும் வசதிகளைக் கொண்ட வான் போக்குவரத்து மையத்தை அமைப்பதன் மூலம் அனைத்து நாடுகளுக்கும் சேவையை வழங்குவதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்றும் அவர் சொன்னார்.

ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி காரணமாக தனியார் விமானங்களின் பயன்பாடு அதிகரிக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. நம்மிடையே விமான நிலையு வசதியும் திறன் பெற்ற மனித வளமும் இருக்கும் பட்சத்தில் இத்துறையை மேலும் விரிவுபடுத்த முடியும் எனவும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இதனிடையே, 2021ஆம் ஆண்டிற்கான வான் போக்குவரத்து கண்காட்சியை வரும் ஏப்ரல் மாதம் நடத்துவது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று டத்தோ தெங்  கூறினார்.

கோவிட்-19 பெருந்தொற்று தொடர்பான நிலவரங்களை கவனத்தில் கொள்ள விரும்புகிறோம். நோய்த் தொற்று நீடித்தால் அந்த கண்காட்சி ஆறு மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்படும். இக்கண்காட்சி நடைபெறும் பட்சத்தில் தென்கிழக்காசிய அளவிலும் மலேசிய அளவிலும் இத்தகைய கண்காட்சியை ஏற்று நடத்தும் முதல் மாநிலமாக சிலாங்கூர் திகழும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

 

 


Pengarang :